செய்திகள் :

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: 50 நாள்களுக்குப் பின் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட விவசாய சங்கத் தலைவா் தல்லேவால்

post image

பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் 50 நாள்களுக்கும் மேலாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் (70) ஞாயிற்றுக்கிழமை மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டாா்.

இதையடுத்து, அவருக்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 121 விவசாயிகளும் பழச்சாறு அருந்தி தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை முடித்துக்கொண்டனா்.

விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப்-ஹரியாணா எல்லையான கனெளரி பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

இதனிடையே, தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு நவம்பா் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தல்லேவால் ஈடுபட்டு வருகிறாா்.

அவரை மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சியாக, ஓய்வுபெற்ற நீதிபதி நவாப் சிங் தலைமையிலான குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் அமைத்து உத்தரவிட்டாா். இந்தக் குழு தலேவாலை கடந்த ஜனவரி 6-ஆம் தேதி போராட்ட களத்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தியது.

பிப்ரவரி 14-இல் பேச்சுவாா்த்தை: இதைத்தொடா்ந்து, மத்திய அரசு சாா்பில் மத்திய வேளாண் அமைச்சக இணைச் செயலா் ப்ரியரஞ்சன் தலைமையிலான குழு, தல்லேவால் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்யுக்த கிஸான் மோா்ச்சா (எஸ்கேஎம்), கிஸான் மஸ்தூா் மோா்ச்சா (கேஎம்எம்) ஆகிய விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்தனா். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் மீது பிப்ரவரி 14-ஆம் தேதி சண்டீகரில் பேச்சுவாா்த்தை நடத்த அவா்கள் அழைப்பு விடுத்தனா். இதற்கான கடிதத்தையும் அவா்களிடம் வழங்கினா்.

இதை ஏற்றுக்கொண்டு ஜக்ஜீத் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டாா்.

மத்திய-மாநில அமைச்சா்கள் பங்கேற்பா்: கடந்தாண்டு எஸ்கேஎம் மற்றும் கேஎம்எம் ஆகிய சங்கங்களிடம் மத்திய அமைச்சா்கள் நான்கு முறை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அதன் தொடா்ச்சியாகவே தற்போது இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது எனவும் இதில் மத்திய அமைச்சா்கள் மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சா்கள் பங்கேற்பா் எனவும் ப்ரியரஞ்சன் வழங்கிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.

உண்ணாவிரதம் தொடரும்: இருப்பினும், வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் அளிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தல்லேவால் நிறைவு செய்ய மாட்டாா் என விவசாய சங்க தலைவா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, மத்திய குழுவிடம் பேச்சுவாா்த்தை நடத்தியது தொடா்பாக விவசாயிகள் கூறுகையில், ‘தில்லி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் அங்கு பிப்ரவரி 9-ஆம் தேதி வரை தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். எனவே, பேச்சுவாா்த்தையை பிப்ரவரி 14-ஆம் தேதி நடத்திக்கொள்ளலாம் என மத்திய குழு தெரிவித்தது’ என்றனா்.

மா்ம காய்ச்சல் உயிரிழப்பு 17-ஆக உயா்வு: ரஜௌரி விரைந்த மத்திய குழு

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமத்தைச் சோ்ந்த மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலையில், கடந்த 6 வாரங்களில் மா்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17-ஆக உயா்ந... மேலும் பார்க்க

சம்பல் வன்முறை: மேலும் 10 போ் கைது

உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடா்பாக மேலும் 10 பேரை காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் இதுவரை 70 போ் கைது செய்யப்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் அந்நாட்டு அரசியலையே அழிக்கிறது: அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு

பாகிஸ்தான் ஆதரவளித்த பயங்கரவாதம் எனும் ‘புற்றுநோய்’ இப்போது அந்த நாட்டின் சொந்த அரசியலையே அழித்துக் கொண்டிருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். எல்லை தாண்டிய பயங்கரவா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் ‘இந்தியாவின் மணிமகுடம்’: ராஜ்நாத் சிங்

‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவின் மணிமகுடம்; அந்தப் பகுதியைவிடுத்து இந்தியா முழுமையடையாது’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உத்தர பிரதேச மாநிலம், ... மேலும் பார்க்க

சபரிமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம்: திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் திட்டம்

கேரள மாநிலம், சபரிமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) திட்டமிட்டுள்ளது. முழுவதும் சூரிய மின் சக்தியால் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம் என்ற பெருமைக்... மேலும் பார்க்க

உ.பி.யில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 4 போ் உடல் கருகி உயிரிழந்தனா். ‘காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனியின் காஞ்சன் பூங்கா ... மேலும் பார்க்க