செய்திகள் :

``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முருகன் சந்தேகம்

post image

புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி மரணத்தில் சந்தேகம் உள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "புதுக்கோட்டையில் கனிம வளக்கொள்கைக்கு எதிராக போராடியவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல், மண், மலை உள்ளிட்ட கனிமவளங்கள் சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. பெயருக்கு ஒரு அரசு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட அளவைவிட பல ஆயிரம் மடங்கு கனிமங்கள் வெட்டி அள்ளப்படுவதைப் பல முறை ஆய்வுகளில் கண்டறியப்பட்டாலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, விதியை மீறிய குவாரிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையைக் கூட கட்டாமல் கல்குவாரி அதிபர்கள் காலம் கடத்துவதை அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இச்சூழலில், புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர் ஜகபர் அலி. சமூக ஆர்வலரான அவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வருகிறார். ஆனால், இவ்விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த 10.01.2025 அன்று, திருமயம் தாலுகாவில் கனிம வளக்கொள்கை நடப்பதாக, புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம், தோழர் ஜகபர் அலி மனு கொடுத்திருக்கிறார்.

அந்த மனுவில், சில குவாரிகளின் பெயர்களுடன், பல முக்கிய ஆதாரங்களையும் இணைத்து, கனிம வளக்கொள்ளை நடந்ததை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில், 17.01.2025 அன்று, தோழர் ஜகபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, அவ்வழியாக வந்த கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று, ஜகபர் அலியின் வாகனத்தின் மீது மோதியிருக்கிறது. இதில், தோழர் ஜகபர் அலி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

தோழர் ஜகபர் அலியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அதாவது, கல்குவாரி அதிபர்களால் திட்டமிடப்பட்டு, இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுகிறது.

ஜகபர் அலி கொலையில் வேல்முருகன் சந்தேகம்!

ஏனென்றால், தமிழ்நாட்டில் கனிம வளக்கொள்ளையை எதிர்த்த நேர்மையான அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும் சில அரசியல் கட்சியினரின் முழு ஆதரவோடு கொள்ளை நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, தோழர் ஜகபர் அலியும் திட்டமிட்டு கல்குவாரி அதிபர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இதில் அரசு அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சந்தேகிக்கிறது.

எனவே, தோழர் ஜகபர் அலி மரண விவகாரத்தை விசாரிக்க, இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் மணல், கற்கள் உள்ளிட்ட கனிமவள கொள்ளையை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தோழர் ஜகபர் அலியின் குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தோழர் ஜகபர் அலியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

காதலனுக்கு கஷாயத்தில் விஷம்; காதலி கிரீஷ்மாவுக்கு சாகும்வரை தூக்கு - தண்டனை விவரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜிக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கு நாட்டையே உலுக்கியிருந்தது. இந்த வழக்கில் கன்னியாகுமரி ... மேலும் பார்க்க

சேலம்: துணை மேயர் வீட்டில் கொள்ளை சம்பவம்; சிசிடிவியில் பதிவான கர்சிஃப் திருடர்கள்.. போலீஸ் விசாரணை!

சேலம் மாநகராட்சியின் துணை மேயராக இருந்து வருபவர் சாரதா தேவி. இவருக்கு சொந்தமான பண்ணை வீடு வீராணம் காவல் நிலைய எல்லையில் கோராத்துப்பட்டி எனும் கிராமத்தில் இருந்து வருகிறது. கடந்த 07.01.2025 ம் தேதி இரவ... மேலும் பார்க்க

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தலைமைக் காவலர்; அடிபடும் இன்ஸ்பெக்டர் பெயர்.. என்ன நடந்தது?

நீடாமங்கலம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சந்தானமேரி. அதே காவல் நிலையத்தில் சித்ரா என்பவர் தலைமைக் காவலராக இருக்கிறார். போலீஸ் ஸ்டேஷன்இந்த நிலையில் நேற்று தற்கொலை செய்து கொள்வதற்காக சித்... மேலும் பார்க்க

Saif Ali Khan stabbing case: இரவு புதரில் 5 மணிநேரத் தேடல்; 2 மணிக்குக் குற்றவாளியைப் பிடித்த போலீஸ்

மும்பையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பிளேடால் தாக்கினார். பிளேடால் குத்தியதால் சைஃப் அலிகானுக்கு 6 இடங்களில் காயம் ஏற்பட்டது.தாக்க... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: கணவனிடம் காட்டிக்கொடுத்த கூலிப்படை... கொலை முயற்சியில் சிக்கிய மனைவி!

ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம் அருகே உள்ள தெற்கு கும்பரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். சென்ட்ரிங் காண்ட்ராக்டராக பணிபுரியும் இவருக்கு கோட்டை ஈஸ்வரி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் ... மேலும் பார்க்க

``கனிமவள கொள்ளை ஆதாரத்துடன் புகார் கொடுத்தவர் லாரி ஏற்றிக் கொலை'' -கொதிக்கும் மக்கள்; நடந்தது என்ன?

கனிமவள கொள்ளை -ஆதாரங்களை இணைத்து மனு..புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகில் உள்ள வெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. இவர், மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளராகவும், அ.தி.மு.க-வில் ஒன்றிய பொறு... மேலும் பார்க்க