கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: சஞ்சய் ராய்க்கு சாகும்வரை ஆயுள்
ஷரோன் ராஜ் கொலை: குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை!
கேரள மாநிலத்தை உலுக்கிய ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த கிரீஷ்மா மற்றும் அவரது உறவினர் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், கிரீஷ்மாவின் தாய்க்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்தும் விசாரணை நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருக்கும் இருவருக்குமான தண்டனை விவரத்தை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. அதில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், உறவினருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுளள்து.
2022ஆம் ஆண்டு, ஆயுர்வேத மருந்து என்று கூறி விஷத்தை தண்ணீரில் கலந்து ஷரோனுக்குக் கொடுத்து கிரீஷ்மா கொலை செய்த சம்பவத்தில் இன்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.