செய்திகள் :

BB Tamil 8: ``காயப்படுத்திய அவர் என் வாழ்க்கைக்குத் தேவையில்லை" - அன்ஷிதா

post image

கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' நேற்று ( ஜனவரி 19) இரவு நடைபெற்றது.

மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களாக, முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால்,பவித்ரா மற்றும் ரயான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் பிக்பாஸ் சீசன் 8-ன் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் முதல் இடத்தைப் பிடித்து trophy ஐ தட்டிச்சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'Grand Finale' நிகழ்ச்சியில் எவிக்ட் ஆன போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

அன்ஷிதா
அன்ஷிதா

அவர்களிடம் பிக் பாஸ் போட்டியில் இருந்து எவிக்ட் ஆன பின்னர், செய்த முதல் வேலை என்னவென்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது அந்த கேள்விக்குப் பதில் அளித்த அன்ஷிதா, "இந்த சீசனின் மூன்றாவது வாரத்தில் இருந்து எனது வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. நிறைய யோசித்தேன். அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னாடி ஒருத்தர் என்னையை காயப்படுத்திதான் அனுப்பிவிட்டார்.

அந்த நபர் இனி என் வாழ்க்கைக்கு வேண்டுமா? வேண்டாமா? என்று இந்த வீடு என்னை சிந்திக்க வைத்தது. நான் வெளியில் சென்றவுடன் அந்த நபரைத்தான் முதலில் பார்த்தேன். இனிமேல் நீங்கள் என் வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று தைரியமாக சொல்லிவிட்டு வந்தேன்.

அன்ஷிதா
அன்ஷிதா

இதைத்தான் முதலில் செய்தேன். விஜய் டி.வியில் மற்றொரு புராஜக்ட்டில் இணைந்திருக்கிறேன். அதற்கான ஷூட் நடந்துகொண்டிருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அன்ஷிதாவை திருப்பிக்கொடுத்திருக்கிறது." என்றார். அன்ஷிதாவின் இந்த பேச்சு இணையத்தில் இருக்கிறது.

`மிஸ்டர் ஜெய் ஆகாஷ் ரசிகர்களுக்கு..' - `நெஞ்சத்தைக் கிள்ளாதே' தொடர் சர்ச்சை குறித்து கண்டித்த ரேஷ்மா

`நெஞ்சத்தைக் கிள்ளாதே'ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர் `நெஞ்சத்தைக் கிள்ளாதே'. ஜெய் ஆகாஷ் கதாநாயகனாகவும், ரேஷ்மா கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். ஹிந்தியில் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப்பெற்ற படே அச்சே லக... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 105: மகிழ்ச்சி; கண்ணீர்; பிரியாவிடை; கிடைத்த அங்கீகாரம்; பைனலில் நடந்ததென்ன?

‘இந்த வீடு உங்களுக்குத் தந்தது என்ன? வரும் போது எப்படி இருந்தீர்கள், இப்போது என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்? உங்களுடைய பிம்பத்துடன் நீங்களே உரையாடுங்கள்’ என்றொரு டாஸ்க்கை டாப் 5 போட்டியாளர்களுக்கு தந்தா... மேலும் பார்க்க

ஜமீன் குடும்பம்; சினிமா; லவ் மேரேஜ்; பிரிந்து சென்ற கணவர் - ‘சுந்தரி அப்பத்தா’ பர்சனல்ஸ்

சின்னத்திரை பாட்டிகளிலேயே ட்ரெண்ட் செட்டிங் பாட்டி சுந்தரி சீரியலில் வந்த அப்பத்தா பி.ஆர் வரலட்சுமி அவர்கள்தான். அந்த சீரியல் முழுக்க துறுதுறுன்னு நடிச்ச அவங்களோட பர்சனல், சினிமா என்ட்ரி, அடுத்து என்ன... மேலும் பார்க்க

Bigg Boss 8 Grand Finale: "எங்க அம்மாதான்; அவங்க சொல்லிக் கொடுத்த..." - நெகிழ்ந்த முத்து

கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக்பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' இன்று இரவு நடைபெற்ற வருகிறது.அர்னவ், ரவீந்தர், முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட... மேலும் பார்க்க