செய்திகள் :

Bigg Boss Rayan: `எனக்கான இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகணும்னு நினைக்கிறேன்' - பட விழாவில் ரயான்

post image
பிக் பாஸ் சீசன் 8 முடிந்துவிட்டது.

பிக் பாஸ் பயணம் முடிந்த அடுத்த நாளே தன்னுடைய சினிமா வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார் `டாஸ்க் பீஸ்ட்' ரயான். `ஜம்ப் கட்ஸ்' ஹரி பாஸ்கர், லாஸ்லியா நடிப்பில் உருவாகியிருக்கும் `Mr.ஹவுஸ்கீப்பிங்' படத்தில் ரயனும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். பிக் பாஸ் நேற்று முடிந்தப் பிறகு இன்று நடைபெற்ற இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டார் ரயான்.

நம்மிடையே பேசிய ரயான், `` நேத்துதான் பிக் பாஸ் முடிஞ்சது. இந்தப் படத்துக்காக முதல்ல இயக்குநர் அருணை நான் சந்திக்கும்போது அவருக்கே பெருசா என்மேல நம்பிக்கை இல்ல. இந்தப் படத்துக்கு முன்னாடி பெரியதாக எந்த விஷயமும் நான் பண்ணல. என்னை நிரூபிக்கிறதுக்கான வாய்ப்பும் எனக்கு கிடைக்கல. இந்தப் படத்துல நடிக்கும்போது தினந்தினம் பல விஷயங்கள் நான் கத்துக்கிட்டேன். இந்தப் படத்துல நடிக்கும்போது லாஸ்லியாகிட்ட பிக் பாஸ் பற்றி பேசினேன். அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு நானே பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனேன். யாருமே நினைச்சுப் பார்க்காத விஷயமாக அங்க இந்தப் படத்துக்காக ப்ரோமோஷனும் பண்ணினோம். எல்லோரும் ஒரு வாய்ப்புக்காகதான் காத்திருப்பாங்க. எனக்கான இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை சரியாக நான் பயன்படுத்திக்கணும்னு நினைக்கிறேன்." என்றவர் பிக் பாஸ் தொடர்பாக பல விஷயங்களை எடுத்துரைக்க தொடங்கினார்.

Mr. House Keeping

அவர், `` பிக் பாஸ் வீட்டுக்குள்ள சாப்பாடு கிடைக்கும். ஆனால், அதுக்குமே பெரிய டாஸ்க்குகள் இருக்கும். இப்போ வீட்டுக்குள்ள போயிட்டு வந்தவங்க பலரும் எடை குறைவாகியிருக்காங்க." என்றார். `லாஸ்லியா பிக் பாஸ் போட்டிக்கு எதாவது டிப்ஸ் கொடுத்தாரா?' என்ற கேள்விக்கு பதிலளித்த ரயான், `` இல்ல, ஐடியாவே இல்ல. இந்தப் படம் நடக்கும்போது நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போவேன்னு தெரியாது. இந்தப் படம் முடிஞ்சதுக்குப் பிறகுதான் எனக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைச்சது. " எனக் கூறி முடித்துக் கொண்டார்.

Rajinikanth: ``அங்கதான் கடைசி பெஞ்ச்சுக்கு போனேன்" - பள்ளி ரீ யூனியன் குதூகலமாக வாழ்த்திய ரஜினி

பெங்களூருவில் என்.ஆர். காலனி பகுதியில் பிரபலமான ஏ.பி.எஸ். என்கிற ஆச்சார்யா பாடசாலா கல்விக் குழுமத்தில் பழைய மாணவர்கள் சந்திப்பு வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி பள்ளி நிர்வாகம் பழைய மாணவர்... மேலும் பார்க்க

புது அவதாரத்தில்;மிர்ச்சி சிவா; யுவன் இல்லாமல் முதல் ராம் படம்!

சத்தம் காட்டாமல் இயக்குநர் ராம், ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். 'பறந்து போ' என அதற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். Rotterdam film festivalலில் திரையிட அந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

Sardaar 2 : மிரட்டலான லுக்; பிரமாண்ட செட்; தயாராகும் டீசர் - அடுத்த பட அறிவிப்பு

'மெய்யழகன்' படத்திற்குப் பின் கார்த்தியின் கிராப் எதிர்பார்ப்பிற்குள்ளாகி விட்டது. 'சூது கவ்வும்' இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் 'வா வாத்தியார்', 'சர்தார்' பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் 'சர்த... மேலும் பார்க்க

Ajith: ``அடைந்தால் நல்ல விஷயம்; வெற்றி அடையாவிட்டாலும்... " - ரசிகர்கள் குறித்து அஜித்

துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார் போர்ச்சுக்கலில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் அஜித் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதள... மேலும் பார்க்க

Director Bala: ``வன்முறை என்பது எனது இரத்தத்தில் இருக்கிறது!'' - இயக்குநர் பாலா

அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் "வணங்கான்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தின் 'நன்றி தெரிவிக்கும் விழா நேற்றைய தினம் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அருண்... மேலும் பார்க்க