செய்திகள் :

புது அவதாரத்தில்;மிர்ச்சி சிவா; யுவன் இல்லாமல் முதல் ராம் படம்!

post image
சத்தம் காட்டாமல் இயக்குநர் ராம், ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

'பறந்து போ' என அதற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். Rotterdam film festivalலில் திரையிட அந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மிகவும் கருத்தியல் ரீதியான படங்களை எடுப்பதில் தேர்ந்தவர் ராம். அவரது முதல் படமான கற்றது தமிழ் முதற்கொண்டு அவரின் படங்கள் ஏதாவது ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதை தீவிரமாகக் கொண்டுச் செல்பவை. 'ஏழுகடல் ஏழுமலை' என்ற ஒரு படத்தை எடுத்து அதுவும் வெளிநாட்டின் திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு கவனத்திற்குள்ளாகி இப்போது தமிழகத்தில் திரைக்கு வர காத்திருக்கிறது.

மிர்ச்சி சிவா
மிர்ச்சி சிவா

இப்படியான தீவிரமான படங்களை எடுத்தவர் இப்போது மிர்ச்சி சிவாவை ஹீரோவாக போட்டு 'பறந்து போ' என்ற படத்தை எடுத்திருப்பது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இசை கலந்த காமெடி படம் என்கிறார்கள். வசதி குறைந்த ஒரு தகப்பனுக்கும் அவருடைய பையனுக்குமான உறவைப் படம் பேசுகிறது. முற்றிலும் அவருடைய இயல்பிலிருந்து மாறுபட்டு இந்த படம் அமைந்திருப்பதாக சொல்கிறார்கள்.

மிர்ச்சி சிவா இப்படி நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது என்பதுதான் பேச்சாக இருக்கிறது. இயக்குநர் ராம், நடிக்க அவரை அழைக்கும் போது அவரால் நம்ப முடியாமல் இருந்ததாகவும், மறுபடியும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். ராமின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவும் இதில் இல்லை. பதிலாக சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

ராம்
ராம்

டைரக்டர் ராமின் காமெடியை சந்திக்கவும் அவரது மெலிதான இந்தக் கதையை படமாக்கிய விதத்தை பார்க்கவும் திரை ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். வெகு நாட்களுக்குப் பிறகு ராம் தொடர்ச்சியாக 'ஏழு கடல் ஏழுமலை', 'பறந்து போ' என்ற இரண்டு படங்களை எடுத்து முடித்திருக்கிறார். முதலில் நிவின் பாலி, சூரி நடிக்கும் 'ஏழு கடல் ஏழுமலை' வெளியாகிறது. அதற்குப் பிறகுதான் மிர்ச்சி சிவா நடித்திருக்கும் 'பறந்து போ' வெளியாகிறது.

Rajinikanth: ``அங்கதான் கடைசி பெஞ்ச்சுக்கு போனேன்" - பள்ளி ரீ யூனியன் குதூகலமாக வாழ்த்திய ரஜினி

பெங்களூருவில் என்.ஆர். காலனி பகுதியில் பிரபலமான ஏ.பி.எஸ். என்கிற ஆச்சார்யா பாடசாலா கல்விக் குழுமத்தில் பழைய மாணவர்கள் சந்திப்பு வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி பள்ளி நிர்வாகம் பழைய மாணவர்... மேலும் பார்க்க

Sardaar 2 : மிரட்டலான லுக்; பிரமாண்ட செட்; தயாராகும் டீசர் - அடுத்த பட அறிவிப்பு

'மெய்யழகன்' படத்திற்குப் பின் கார்த்தியின் கிராப் எதிர்பார்ப்பிற்குள்ளாகி விட்டது. 'சூது கவ்வும்' இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் 'வா வாத்தியார்', 'சர்தார்' பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் 'சர்த... மேலும் பார்க்க

Bigg Boss Rayan: `எனக்கான இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகணும்னு நினைக்கிறேன்' - பட விழாவில் ரயான்

பிக் பாஸ் சீசன் 8 முடிந்துவிட்டது.பிக் பாஸ் பயணம் முடிந்த அடுத்த நாளே தன்னுடைய சினிமா வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார் `டாஸ்க் பீஸ்ட்' ரயான். `ஜம்ப் கட்ஸ்' ஹரி பாஸ்கர், லாஸ்லியா நடிப்பில் உருவாகியிருக்... மேலும் பார்க்க

Ajith: ``அடைந்தால் நல்ல விஷயம்; வெற்றி அடையாவிட்டாலும்... " - ரசிகர்கள் குறித்து அஜித்

துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார் போர்ச்சுக்கலில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் அஜித் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதள... மேலும் பார்க்க

Director Bala: ``வன்முறை என்பது எனது இரத்தத்தில் இருக்கிறது!'' - இயக்குநர் பாலா

அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் "வணங்கான்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தின் 'நன்றி தெரிவிக்கும் விழா நேற்றைய தினம் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அருண்... மேலும் பார்க்க