Robo Shankar: இந்திரஜாவிற்கு ஆண் குழந்தை; உற்சாகத்தில் ரோபோ சங்கர் குடும்பம்!
சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பரிச்சயமானவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் ஒரே மகள் இந்திரஜா ரோபோ சங்கர். `பிகில்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். `சர்வைவர்' ரியாலிட்டி ஷோவில் அதிக கவனம் பெற்றார். அதன் பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். தனது உறவுக்காரர் கார்த்திகைத் திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் சினிமா இயக்குநர்.
திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி ஜோடியாக இணைந்து `மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியின் நடுவிலேயே இந்திரஜா கர்ப்பமானதால் அதனைத் தொடர முடியாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்கள். அந்த ரியாலிட்டி ஷோ மேடையிலேயே கார்த்திக் - இந்திரஜா தம்பதிக்குப் போட்டியாளர்கள், நடுவர்கள் உட்படப் பலர் சடங்குச் செய்து வழியனுப்பி வைத்தார்கள்.
விஜய் டிவி நிகழ்ச்சியிலேயே `நான் தாத்தா ஆகப் போறேன்' என நெகிழ்ந்து பேசியிருந்தார் ரோபோ சங்கர். இந்நிலையில், இன்று இந்திரஜா - கார்த்திக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கார்த்திக் அந்த சந்தோஷ செய்தியை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இந்த ஜோடிக்குச் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
வாழ்த்துகள் இந்திரஜா - கார்த்திக்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...