சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்வு; 23,345 புள்ளிகளை தொட்ட நிஃப்டி!
`மிஸ்டர் ஜெய் ஆகாஷ் ரசிகர்களுக்கு..' - `நெஞ்சத்தைக் கிள்ளாதே' தொடர் சர்ச்சை குறித்து கண்டித்த ரேஷ்மா
ஜீ தமிழில் ஒளிபரப்பான தொடர் `நெஞ்சத்தைக் கிள்ளாதே'. ஜெய் ஆகாஷ் கதாநாயகனாகவும், ரேஷ்மா கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். ஹிந்தியில் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற படே அச்சே லக்தே ஹைன் தொடரின் ரீமேக் ஆகும். தமிழில் இந்தத் தொடர் `உள்ளம் கொள்ளை போகுதடா' என்கிற பெயரில் ரீமேக் ஆனது. இந்த கான்செப்டில் உருவானதுதான் இந்தத் தொடர். 148 எபிசோடுடன் தற்போது அந்தத் தொடர் நிறைவடைந்திருக்கிறது. இவ்வளவு சீக்கிரம் ஏன் இந்தத் தொடரை முடிக்க வேண்டும்? அதற்கு என்ன காரணம்? எனப் பலரும் சமூகவலைதளப் பக்கங்களில் இது தொடர்பாக கேட்டு வந்தனர்.
இந்நிலையில் ஜெய் ஆகாஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனக்கு கடந்த செப்டம்பர் மாதம் காலில் அடிபட்டது. ஷூட் இருந்ததால நான் கொஞ்சமும் ஓய்வு எடுக்காம வந்துட்டேன். ஓய்வு எடுத்திருந்தால் என் கால் வலி குறைஞ்சிருக்கும். சீரியல் ஷூட்டிங் சினிமா ஷூட்டிங் மாதிரி கிடையாது. பிரேக் எடுத்துட்டு மறுபடி கன்டின்யூ பண்ண முடியாது. தொடர்ந்து கால் வீக்கத்தோடவே ஷூட்டிங்கில் கலந்துகிட்டேன். ஷூட்டிங்கில் ஹீரோயின் ரேஷ்மாவை தூக்கிட்டு ஓடுற மாதிரியெல்லாம் சீன் இருந்தது. சண்டைக்காட்சிகள் இருந்தது. அதனால கால் ரொம்ப பிரச்னையாகிடுச்சு. நான் இதுக்காக பார்த்த மருத்துவர்கள் எல்லாரும் இதுக்கு ஒரு ஆப்ரேஷன் பண்ணனும். அது முடிஞ்சதும் 2,3 மாசம் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. 2 மாசம் ரெஸ்ட் எடுத்தா சீரியலை ஹீரோ இல்லாம தொடர முடியாது. அதனாலேயே இந்த சீரியலை நம்பி நிறைய குடும்பங்கள் இருக்காங்கன்னு தொடர்ந்து அந்த வலியோட, வீக்கத்தோட நடிச்சிட்டிருந்தேன்.
நியூஇயர் கொண்டாட லண்டன் போயிருந்தேன். அங்க என்னைப் பார்த்த என் மனைவி இதை இப்படியே விட்டா ரொம்ப சீரியஸாகிடும்னு சொல்லி உடனே ஆப்ரேஷன் பண்ண வேண்டியதாகிடுச்சு. குறைந்தது ஒரு மாசமாவது ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லியிருக்காங்க. ஆனா, சீரியலில் நான் இல்லாத ஒரு வாரம் இன்ட்ரஸ்ட் ஆக இல்லை.. சேனல் வந்து ஹீரோ இல்லாம கன்டின்யூ பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால வேற வழியில்லாம இந்த சீரியலை முடிக்க வேண்டியதாகிடுச்சு. மத்தபடி இதுக்கு வேற எந்தக் காரணமும் இல்ல. நான் சீரியலுக்கு வராம இருந்ததுக்கு அதுதான் காரணம்!" என பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
ரேஷ்மாவின் ரசிகர்கள், `அவர் இல்லை என்றாலும் தொடர் சிறப்பாகத்தான் சென்று கொண்டிருந்தது. உண்மைக்காரணம் இதுவல்ல. அவர் சினிமாவில் நடிப்பதற்காகவே இந்தத் தொடரிலிருந்து விலகி இருக்கிறார்!' என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளை பதிவிட்டனர்.
இதற்கிடையே ஜெய் ஆகாஷ் ரசிகர்களுக்கும், ரேஷ்மா ரசிகர்களுக்கும் இடையில் இது குறித்து பல கருத்து மோதல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. ரேஷ்மா அவருடைய ரசிகர்களுக்காக முதன்முறையாக பதில் கொடுத்திருக்கிறார். அதில்,
`மிஸ்டர் ஜெய் ஆகாஷ் ரசிகர்களுக்கு, உண்மையில் என்ன நடந்ததுன்னு தெரியாதப்ப நீங்களா தப்பான விஷயத்தை பரப்பாதீங்க. உண்மை என்னன்னு தெரியாம கண் மூடித்தனமா ஒருத்தரை நம்பாதீங்க. நெஞ்சத்தைக் கிள்ளாதே டீம்ல இருக்கிற எல்லாருக்கும் உண்மையில் ஏன் இந்த சீரியல் முடிவடையுதுங்கிறது தெரியும். இதில் என்னுடைய தவறோ என் டீமோட தவறோ எதுவுமில்லை. என்னுடைய ரசிகர்களை தாக்குவதால் உண்மையை மாற்ற முடியாது. என் ரசிகர்களுக்கு என் மீது அன்பும், மரியாதையும் இருக்கு. அவங்க காரணமே இல்லாம டார்கெட் பண்ணப் படுறதை என்னால பொறுத்துக்க முடியாது. நீங்க உண்மையில் உங்க ஹீரோ பக்கம் இருக்க விரும்பினால் புரொபஷனலிசத்தை என்கரேஜ் பண்ணுங்க, டாக்சிட்டியை பண்ணாதீங்க!' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே உண்மையில் தொடர் முடிவடைய என்ன தான் காரணம்? என அந்தத் தொடரின் ரசிகர்கள் பலர் கேட்டு வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...