காஸா: இடம்பெயர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு!
முன்னாள் மனைவியைக் கட்டிவைத்து ஆசிட் தாக்குதல் நடத்தியவர் கைது!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் தனது முன்னாள் மனைவியைக் கட்டிவைத்து அவர் மீது ஆசிட் ஊற்றி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவாய் மதோப்பூரில் அரசு கல்வி நிறுவனத்தின் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மமதா கவுட் எனும் பெண் கடந்த ஜன.18 அன்று கோட்டா மாவட்டத்தில் நடைபெறும் ஆசிரியர் மாநாட்டிற்காக வந்திருந்தார். அப்போது, கோட்டவிலுள்ள அவரது முன்னாள் கணவரான சுனில் திக்ஸித் (வயது 50) என்பவரது வீட்டில் அவர் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜன.18 அன்று இரவு சுனில், தூங்கிக் கொண்டிருந்த மமதாவின் கைகால்களைக் கட்டிப்போட்டு அவர் மீது ஆசிட் ஊற்றி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், மமதாவின் உடலில் 50 சதவிகித பகுதி ஆசிடால் எரிந்து காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மாலிவால்!
இதனைத் தொடர்ந்து, அவரை வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு சுனில் தப்பிச் சென்றுள்ளார். பின்னர், தானாகவே அந்த கயிற்றை அவிழ்த்து தன்னை விடுவித்துக்கொண்ட மமதா அவரது சகோதரரை செல்போனில் அழைத்துள்ளார், அவரது சகோதரர் அக்கம்பக்கதினரை அழைத்து கூறியதைத் தொடர்ந்து அவர்கள் வந்து மமதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மமதாவின் தற்போது நலமாக உள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் நேற்று (ஜன.19) இரவு சுனிலை சித்தோர்கார் மாவட்டத்தில் கைது செய்தனர்.
முன்னதாக, மமதாவிற்கும் சுனிலுக்கும் விவாகரத்தான நிலையில் வேலையின்மையால் மனவுளைச்சலுக்கு சுனில் ஆளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.