பொதுத் தேர்வுக்கான கவுன்ட்வுன்: பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!
‘யாத்திசை’ இயக்குநரின் அடுத்தப்படம் துவக்கம்!
2023 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘யாத்திசை’ திரைப்படத்தின் இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை நேற்று (ஜன.19) நடைபெற்றது.
நடிகர் குரு சோமசுந்தரம், அறிமுக நாயகன் செய்யோன் உள்பட பல புதுமுக நடிகர்களின் நடிப்பில் பழங்காலத் தமிழ் மன்னர்கள் மற்றும் தமிழ் மக்களின் வாழ்வியல் குறித்து வரலாற்று திரைப்படமாக உருவான ‘யாத்திசை’ கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது.
அப்போது, பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை என்றாலும் அந்த திரைப்படம் ஒடிடியில் வெளியான பின்னர் தமிழ் மக்களாலும், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களினாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஜே.கே. பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பூஜையும் அறிமுக நிகழ்ச்சியும் நேற்று (ஜன.19) நடைபெற்றது.
இதையும் படிக்க: ரேகா சித்திரம் - வெற்றியைப் பதிவுசெய்த ஆசிஃப் அலி!
இந்த திரைப்படத்தில், ‘யாத்திசை’ நாயகன் செய்யோன், விடுதலை திரைப்படம் புகழ் பவானி, நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி ஆகியோர் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது முந்தையப் படத்தின் போலவே இந்த திரைப்படமும் சவலான காட்சியமைப்பில் உருவாக உள்ளதாக இயக்குநர் தரணி தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான விகடன் திரைப்பட விருதுகளில் யாத்திசை படக்குழுவிற்கு சிறந்த படக்குழுவிற்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.