Kotak Mahindra Bank பங்கு விலை அதிகரிக்க இதுதான் காரணமா? | IPS Finance | EPI - 1...
விஜய் சேதுபதிக்கு பிடிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ்!
நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ் என விஜய் தொலைக்காட்சியின் தலைமை இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டும் என விஜய் சேதுபதியிடம் கேட்டபோது அவர் இந்த பதிலைக் கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. அக்டோபர் 6 முதல் நடைபெற்றுவந்த இந்த நிகழ்ச்சி, 100 நாள்களைக் கடந்து 106 நாள்களுக்கு ஒளிபரப்பானது. பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். அவருக்கு அடுத்தபடியாக நடிகை செளந்தர்யா தேர்வு செய்யப்பட்டார். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இந்த வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இறுதி நாளில் வெற்றியாளர் யார் என்பதை அறிவிக்கும் முன்பு விஜய் சேதுபதிக்கு பயண விடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அப்போது பேசிய விஜய் தொலைக்காட்சி தலைமை இயக்குநர் விஜய், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கோரி விஜய் சேதுபதியிடம் கேட்டுக்கொண்ட சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ''பிக் பாஸ் 8 வெற்றியாளர் யார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒவ்வொரு சீசன் ஆரம்பிக்கும்போது பதட்டம் இருக்கும். ஆனால் இந்த சீசன் வெளியாகும்போது நாங்கள் வெளியிட்டது ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்பதுதான்.
இம்முறை சிறப்பான போட்டியாளர்கள் அமைந்தனர். இம்முறை அமைந்தது போன்று வேறு எந்த சீசனிலும் போட்டியாளர்கள் அமையவில்லை. உங்கள் முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன்.
வெளி உலகத்தில் உள்ள மக்கள் நம்மைப் பற்றி மதிப்பிடுகிறார்கள் எனத் தெரிந்தும் நீங்கள் விளையாடியது சிறப்பு வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கக்கோரி விஜய் சேதுபதியிடம் பேசியபோது அவர் முதலில் மறுத்துவிட்டார். பிக் பாஸ் எனக்குப் பிடிக்காத நிகழ்ச்சி எனக் கூறி முடித்துக்கொண்டார். ஆனால், பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்தார். நான் என்ன செய்ய வேண்டும் எனக் கூறுங்கள் அதன்படி நான் செய்கிறேன் எனக் கூறினார்.
முதல் இரு வாரங்கள் கடந்தன. அதன் பிறகு விஜய் சேதுபதி எங்களுக்கு சில அறிவுரைகளைக் கூறினார். அது எந்த அளவுக்கு என்றால், அடுத்த சீசனில் போட்டியாளர்கள் எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதை மக்கள் அறியும்படி இருக்க வேண்டும் எனக் கூறினார். அது சிறப்பான யோசனை. அடுத்த சீசனில் அவ்வாறு நிகழ்ச்சி அமைக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: வெளியே வந்த முதல்வேலையாக காதலை முறித்துக்கொண்ட அன்ஷிதா!