காஸா: இடம்பெயர்ந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு!
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைப் புகழ்ந்த எஸ். ஜே. சூர்யா!
நடிகர் எஸ். ஜே. சூர்யா நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ், உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் பிப். 21 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பாட்டல் ராதா படத்தைப் பார்த்து அழுதுவிட்டேன்: மணிகண்டன்
இந்த நிலையில், நடிகர் எஸ். ஜே. சூர்யா தன் எக்ஸ் தள பக்கத்தில் இப்படத்தைப் பாராட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நம்முடைய சர்வதேச நடிகர் தனுஷுடன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தைப் பார்த்தேன். என்னவொரு பொழுதுபோக்கு படம்! நகைச்சுவையாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் தனித்துவமான படமாக இருந்தது.
தனுஷிடம் ஒரே ஒரு கேள்வி. எப்படி உங்களால் ராயனுக்குப் பின் இவ்வளவு பணிகளுக்கு இடையேயும் இப்படியொரு படத்தை இயக்க முடிந்தது? இப்படத்தை நன்றாக இயக்கியிருக்கிறீர்கள். படத்தில் நடித்த அனைத்து இளம் நடிகர்களுக்கும் என் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.