திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு!
பாட்டல் ராதா படத்தைப் பார்த்து அழுதுவிட்டேன்: மணிகண்டன்
நடிகர் மணிகண்டன் பாட்டல் ராதா திரைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் பாட்டல் ராதா.
மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: விஜய் சேதுபதிக்கு பிடிக்காத நிகழ்ச்சி பிக் பாஸ்!
அதேநாளில் நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் திரைப்படமும் திரைக்கு வருவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், குடும்பஸ்தன் டிரைலர் நிகழ்வில் பேசிய மணிகண்டன், “ஒரு படத்தைப் பார்த்து அழுவது அபூர்வமாகவே நடக்கும். பாட்டல் ராதாவைக் கண்டு அழுதேன். குரு சோமசுந்தரம் மிகச்சிறந்த நடிகர். அவர் பாட்டல் ராதாவில் ஒரு இடத்தில் சிரிப்பார். அழக்கூடாது என மிகக் கஷ்டப்பட்டும் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.” என்றார்.