ரோஹித் சர்மாவிடம் இதனை கற்றுக் கொண்டேன்; மனம் திறந்த ரிஷப் பந்த்!
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த், கேப்டன் ரோஹித் சர்மா குறித்து மனம் திறந்துள்ளார்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஐபிஎல் மெகா ஏலத்தில், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த், லக்னௌ அணியின் கேப்டனாக இன்று நியமிக்கப்பட்டார். இந்த ஐபிஎல் சீசனில் லக்னௌ அணியைக் கேப்டனாக ரிஷப் பந்த் வழிநடத்தவுள்ளார்.
மனம் திறந்த ரிஷப் பந்த்
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த், இந்திய அணியின் கேப்டன்களிடமிருந்து மட்டுமின்றி மூத்த வீரர்களிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக மனம் திறந்துள்ளார்.
இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: நியூசி.யை வீழ்த்தி நைஜீரியா வரலாற்று வெற்றி!
லக்னௌ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ரிஷப் பந்த் பேசியதாவது: இந்திய அணியில் நிறைய மூத்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆட்டம் குறித்து நிறைய அனுபவங்களைக் கொண்டுள்ள அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அணியில் உள்ள அனைத்து மூத்த வீரர்களிடத்திலிருந்தும் கற்றுக் கொள்ளலாம். கேப்டனிமிருந்து மட்டும்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை.
பல கேப்டன்களிமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவற்றில் மிகவும் குறிப்பிட்டு சொல்வது கடினம். ரோஹித் சர்மாவிடமிருந்து, வீரர்கள் மீது எப்படி அக்கறை காட்ட வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். அணியின் கேப்டனாக செயல்படும்போது, வீரர்கள் மீது அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்.
இதையும் படிக்க:இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை தக்கவைத்த ஆஸ்திரேலியா!
அணியில் உள்ள வீரர்களுக்கு நீங்கள் நம்பிக்கையளித்தால், அவர்கள் அணிக்காக கற்பனையிலும் நினைக்க முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்படுவார்கள். அணியில் உள்ள வீரர்களுக்கு கேப்டன் ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.