செய்திகள் :

முதல் டி20: பெத் மூனி அதிரடி; இங்கிலாந்துக்கு 199 ரன்கள் இலக்கு!

post image

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பெத் மூனியின் அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 20) சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் விளையாடியது.

பெத் மூனி அதிரடி

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளாக பெத் மூனி மற்றும் ஜியார்ஜியா இருவரும் களமிறங்கினர். இந்த இணை ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், ஜியார்ஜியா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், பெத் மூனியுடன் ஜோடி சேர்ந்த ஃபோப் லிட்ச்ஃபீல்டு சிறிது நேரம் களத்தில் நீடித்தார். அவர் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 51 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.

இதையும் படிக்க: இவர் முக்கிய வீரராக இருந்திருப்பார்; அணியில் இடம்பெறாத வீரர் குறித்து சுரேஷ் ரெய்னா!

பெத் மூனியுடன் இணைந்து விளையாடிய கேப்டன் தஹிலா மெக்ராத் அதிரடியாக 9 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் லாரென் பெல், சோஃபி எக்கல்ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஃப்ரேயா கெம்ப் மற்றும் சார்லி டீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

மகளிர் உலகக் கோப்பை: நியூசி.யை வீழ்த்தி நைஜீரியா வரலாற்று வெற்றி!

19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி நைஜீரியா வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் அண்மையில் மலேசியாவில் ... மேலும் பார்க்க

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை தக்கவைத்த ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அபார வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 20) ... மேலும் பார்க்க

லக்னௌ அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டின் இறுத... மேலும் பார்க்க

95 சதவிகித டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன; முதல் டி20 போட்டிக்கு தயாராகும் ஈடன் கார்டன்ஸ்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்கு ஈடன் கார்டன்ஸ் தயாராகி வருகிறது.இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் முகமது ரிஸ்வான் புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் புதிய சாதனை படைத்துள்ளார்.பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு காயம்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ... மேலும் பார்க்க