செய்திகள் :

யுஜிசி புதிய விதிகள்: 9 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

post image

யுஜிசியின் புதிய விதிகளுக்கு சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

யுஜிசி இந்த விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஜன. 9 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க | யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக்கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இதனைத் தொடர்ந்து நாட்டில் பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சட்டப்பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, தில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9-1-2025 அன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள்-2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள்-2025 ஆகிய இரண்டு வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மேற்படி தீர்மானம் போன்று தில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலங்கானா சட்டப்பேரவைகளிலும் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாநில முதலமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை குறிப்பிட்டுள்ள முதல்வர், அனைத்து மாநிலங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் என தான் உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று தங்களது மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று மேற்குறிப்பிட்ட மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல் என்றும், இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம் என அம்மாநில முதல்வர்களை தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, தனது இந்தக் கோரிக்கையை மேற்குறிப்பிட்ட மாநில முதல்வர்களும் பரிசீலித்து, தங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!

உத்தரப் பிரதேசத்தில் காதலியை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார். மதம் மாறி திருமணம் செய்ய காதலர் வீட்டில் சம்மதிக்காத நிலையில், பெண் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின... மேலும் பார்க்க

'குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும்' - தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர்

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார். கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனைய... மேலும் பார்க்க

சாகும்வரை சிறை போதாது! மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் மமதா அதிருப்தி

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மாலிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக மாநிலங்களவை எம்.பி., ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி, ப... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம்

கொல்கத்தா பெண் மருத்துவா் வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், பெண் மருத்துவர் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு... மேலும் பார்க்க

யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

யுஜிசியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில், பல்கலைக்கழகங்களில்... மேலும் பார்க்க