Kotak Mahindra Bank பங்கு விலை அதிகரிக்க இதுதான் காரணமா? | IPS Finance | EPI - 1...
தில்லியை தெற்கு சூடானாக மாற்ற வேண்டாம்: ஆம் ஆத்மிக்கு மாலிவால்!
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக மாநிலங்களவை எம்.பி., ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி,
பத்தாண்டுக் கால ஆம் ஆத்மியின் ஆட்சியில் தில்லியைப் பாதிக்கும் பல பிரச்னைகளை அவர் கோடிட்டுக் காட்டினார். தில்லி முழுவதிலும் இருந்து எனக்குப் புகார்கள் வருகின்றன, கடந்த 20 ஆண்டுகளில் இருந்ததை விட இன்று நகரின் நிலை மோசமாக உள்ளது.
சாலைகளில் எங்குப் பார்த்தாலும் குப்பைக் குவியல்கள், குழாய்களில் வரும் நீர் குடிக்கமுடியாத நிலையில் உள்ளது. துவாரகாவில் பல மாதங்களாகக் குழாயிலிருந்து கருப்பு நீர் வருகிறது. பால்ஸ்வாவில் மஞ்சள், நுரை நிரம்பிய தண்ணீர் ஓடுகிறது.
குழாய்களில் வரும் நீர் பீர் போல இருப்பதால், மக்கள் வீடுகளுக்கு பீர் அனுப்பும் திட்டத்தை தொடங்கியுள்ளீர்களா என்று தில்லி அரசிடம் கேட்க விரும்புகிறேன். மக்கள் நாள்தோறும் 20 முதல் 100 ரூபாய் செலவழித்துக் குடிக்கத் தண்ணீர் வாங்குகின்றனர். இந்த நிலையில் தில்லியில் தண்ணீர் எப்படி இலவசம் என்று கூறுகிறீர்கள்..
மக்கள் நலனில் அரசு ஆடம்பரத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டிய மலிவால், தங்களின் ஷீஷ் மஹாலில் மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் விலையுயர்ந்த நீர் அமைப்புகளை நிறுவும்போது, பொதுமக்கள் கருப்பு மற்றும் மஞ்சள் நீரை உட்கொள்ள வைக்கிறனர்.
பால்ஸ்வா குப்பைக் கிடங்கு குறைவதற்குப் பதிலாக வளர்ந்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் குப்பைக் கிடங்கு சுத்தம் செய்ததாகக் கூறினாலும், குவியல் அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளாக சாலைகளில் குப்பைக் கிடக்கும் பங்கா சாலையை நான் பார்வையிட்டேன். பிரச்னையை எழுப்பிய பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு எம்பி ஏன் அடிப்படைத் தூய்மையில் தலையிட வேண்டும்?
நான் சங்கம் விஹாருக்குச் சென்றேன், அங்கு தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் இப்படி அசுத்தமாக வாழத் தள்ளப்பட்டுள்ளனர், நரக வாழ்க்கையை நடத்துகிறார்கள். நான் வந்த பிறகுதான், உள்ளூர் எம்.எல்.ஏ., சாலைகளை சீரமைப்பதாக உறுதியளித்தார். அவர் ஏன் இதுவரை செயல்படவில்லை?