செய்திகள் :

'தன்னைப் பெற்றதற்கான தண்டனை’ எனக்கூறி தாயைக் கொலை செய்த இளைஞர்!

post image

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் ‘தன்னை பெற்றதற்கான தண்டனை’ எனக்கூறி 25 வயது இளைஞர் ஒருவர் தனது தாயை வெட்டிக் கொலைச் செய்துள்ளார்.

கேரள மாநிலம் அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபைதா கயிக்கல் (வயது 53) கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் விவாகரத்து ஆன நிலையில், அவர் சமையல் வேலைகளை செய்து தனது தனது ஒரே மகனான ஆஷிக் (53) உடன் தனியாக வசித்து வந்துள்ளார். பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் சேர்ந்த ஆஷிக் அங்குதான் போதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.

இதனால், போதைப் பொருள் வாங்க அடிக்கடி பணம் கேட்டு அவர் வீட்டில் சுபைதாவுடன் தகராறு செய்வது, வீட்டிலுள்ள பொருள்களில் தீயை பற்றவைப்பது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பின்னர், போதை பொருள் பழக்கத்திலிருந்து தனது மகனை மீட்டுக் கொண்டுவர சுபைதா சுமார் ரூ.5 லட்சம் செலவு செய்து மறுவாழ்வு மையங்களில் சிகிச்சைக்கான ஆஷிக்கை அனுமதித்துள்ளார். அந்த சிகிச்சை முடிந்து கடந்த சில நாள்களுக்கு முன்னர்தான் அவர் வீடு திரும்பியதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தனது மூளையில் ஏற்பட்ட கட்டிக்கான அறுவை சிகிச்சை முடிந்து சுபைதா புதுப்பாடியிலுள்ள அவரது சகோதரியின் வீட்டில் தங்கி ஓய்வு பெற்று வந்துள்ளார். அப்போது, கடந்த ஜன.18 அன்று ஆஷிக் தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாக்குவாதம் முற்றியதில் அவர் பக்கத்து வீட்டிலிருந்து எடுத்துவந்த அறுவாளைக் கொண்டு சுபைதாவின் கழுத்தில் வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுபைதா பரிதாபமாக பலியானார்.

இதையும் படிக்க: ராகுல் மீதான அவதூறு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

இதனைத் தொடர்ந்து, சம்பவம் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் ஆஷிக்கை கைது செய்ததுடன் சுபைதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது உடல் உறவினர்களிடன் ஒப்படைக்கப்பட்டு அடிவாரம் ஜும்மா மசூதியில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த கொலைக்குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஆஷிக் பலரிடம் தனது தாயை தான் கொல்லப்போவதாகக் கூறி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர் போலீஸாரிடம் தன்னைப் பெற்றதற்கான தண்டனையாக அவர் சுபைதாவை கொலைச் செய்ததாகக் கூறியுள்ளார். இந்த கொலையின் போது அவர் போதையில் இருந்தாரா என்பதை கண்டறிவதற்காக அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக ஆயுவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைக்கு அடிமையான மகன் தனது சொந்த தாயை கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க காவல் துறையினரும் அரசு அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விருதுகளைக் குவித்த ‘தி சீட் ஆப் தி சாக்ரெட் ஃபிக்’ திரைப்படம் இந்தியாவில் வெளியீடு!

ஈரான் நாட்டின் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தை மையமாக வைத்து உருவான அந்நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர் முஹம்மது ரசூலொஃபின் இயக்கிய ‘தி சீட் ஆப் தி சாக்ரெட் ஃபிக்’ (The seed of the sa... மேலும் பார்க்க

கார் தாக்குதலில் 35 பேரைக் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சீனாவில் கார் தாக்குதல் நடத்தி 35 பேரைக் கொலை செய்த 62 வயது நபருக்கு இன்று (ஜன.20) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீனாவின் ஜூஹாய் மாகாணத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஃபான் வெய்குயி (வயது 62)... மேலும் பார்க்க

‘யாத்திசை’ இயக்குநரின் அடுத்தப்படம் துவக்கம்!

2023 ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘யாத்திசை’ திரைப்படத்தின் இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கான பூஜை நேற்று (ஜன.19) நடைபெற... மேலும் பார்க்க

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனை கைது செய்ய உத்தரவு!

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஷேக் ஹசீனாவின் அவமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பியுமான ஷகிப் அல் ஹசனை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு டிச.1... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷத்பூரில் இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று 35 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.ஜம்ஷத்பூரின் குருத்வாரா சாலையில் சந்தோஷ் சிங் (வயது 35) என்பவர் தனது வீட்டின் அருக... மேலும் பார்க்க

ஆவடி, பட்டாபிராமில் சகோதரர்கள் கொலை: 5 இளைஞா்கள் கைது

ஆவடி: ஆவடி அருகே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சகோதரர்கள் இருவர் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.ஆவடியை அடுத்த பட்டாபிராம், ஆயில்சேரி... மேலும் பார்க்க