தனுஷ் படத்தை நான் இயக்கவில்லை... அதிர்ச்சியளித்த கௌதம் மேனன்!
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனுஷுடனான படத்தை இயக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது.
தர்புகா சிவா இசையமைத்து இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்து கவனம் பெற்றன. குறிப்பாக, ’மறுவார்த்தை பேசாதே’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: பாராட்டுகளைப் பெறும் பாதல் லோக் - 2!
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை நான் இயக்கவில்லை. அது யாரோ ஒருவர் இயக்கியது. படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மட்டும் நினைவிலிருக்கிறது” என்றார்.
இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், நீண்ட நாள்கள் தயாரிப்பிலிருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை நடிகர் தனுஷ் இயக்கியதால்தான் தோல்விப்படமானது என சிலர் விமர்சித்து வருகின்றனர்.