சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்வு; 23,345 புள்ளிகளை தொட்ட நிஃப்டி!
பொங்கல் விழாவுக்காக ஒன்று திரண்ட தமிழ் அமைப்புகள்! - மும்பையில் களைகட்டிய கொண்டாட்டம்
மும்பையில் விடுமுறை தினமான நேற்று, தமிழ் அமைப்புகள், தமிழ் சங்கங்கள் சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியான பாண்டூப் பகுதியில் 'பாண்டூப் தமிழ்ச்சங்கம்' சார்பாக 14-வது ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள பள்ளி வளாகத்தில் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பள்ளி மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பெண்கள் உற்சாகமாக பொங்கலிட்டனர். பொங்கலிடுவதற்கு தேவையான பொருட்கள் தமிழ் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் எஸ்.தாசன் செய்திருந்தார். விழாவில் கோலம் போடுவது, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இது தவிர தமிழ் வகுப்புகளில் கலந்து கொள்ளும் சிறார்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தாராவி காமராஜர் நினைவு பள்ளி தலைவர் காசிலிங்கம், தொழிலதிபர் ஏ.பி.சுரேஷ், ஐரோலி செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேற்கு புறநகர் பகுதியில் உள்ள வசாயில் இந்த ஆண்டும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.
விழாவிற்கு மும்பை முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். விழாவில் சிறார்களின் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தாராவியில் திருமுருக பக்த சபை சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக 1500 பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜையும் நடந்தது.
பொங்கல் விழாவில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிலம்பாட்டம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருமுருக பக்த சபையின் தலைவர் வேலுமணி செய்திருந்தார்.
டோம்பிவலியில் பல்லவா தமிழ்ச்சங்கம் சார்பாக இரண்டு நாட்கள் பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவ்விழாவில் மாநில ஆளுநர் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரால் வரமுடியாமல் போனது. இது தவிர மலாடு பகுதியிலும் நேற்று பொங்கல் விழா முதல் முறையாக கொண்டாடப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs