செய்திகள் :

Neeraj Chopra: டென்னிஸ் வீராங்கனையைக் கரம் பிடித்த நீராஜ் சோப்ரா - யார் இந்த ஹிமானி?

post image
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா தனக்கு திருமணம் நடந்ததை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் இந்தியாவிற்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கத்தையும், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தையும் வென்று கொடுத்திருக்கிறார். இந்நிலையில் நீராஜ் சோப்ரா ஹிமானி மோர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். தனது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீராஜ் சோப்ரா பகிர்ந்திருக்கிறார். நீரஜ்ஜின் மனைவி ஹிமானிக்கு 25 வயதாகிறது.

நீராஜ் சோப்ரா திருமணம்
நீராஜ் சோப்ரா திருமணம்

டென்னிஸ் வீராங்கனையான இவர் தற்போது அமெரிக்காவில் விளையாட்டு மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (மேஜர்) படித்து வருகிறார். சோனிபட்டைச் சேர்ந்த ஹிமானி சோனிபட்டில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார். Miranda House Delhi University-ல் உடற்கல்வியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். சக விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நீரஜ் சோப்ராவுக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து தெரிவித்து வருகின்றன.

Boat Club: ``1867 இல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட போட் க்ளப்பின் சர்வதேசப் போட்டி" - விவரம் என்ன?

1867 இல் துவங்கப்பட்ட மெட்ராஸ் போட் கிளப் நடத்தும் 81வது ARAE-FEARA சர்வதேச படகோட்டும் போட்டி ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி11 ஆம் தேதி அன்று நிறைவடைய உள்ளது.இந்தப் போட்டியில் சென்னை, புனே, பெங்கால், கல்கத்த... மேலும் பார்க்க