சென்னை விமான நிலையத்தில் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை! பயணிகளுக்கு அறிவுரை...
ஜெய்ப்பூரில் விடுதியின் 6வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
ஜெய்ப்பூரில் விடுதியின் 6வது மாடியில் இருந்து குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முதலாம் ஆண்டு மாணவி திவ்யா. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.50 மணியளவில் விடுதியின் 6வது மாடியில் இருந்து திடீரென குறித்து தற்கொலை செய்துகொண்டார். உடனே அவர் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
'தன்னைப் பெற்றதற்கான தண்டனை' எனக்கூறி தாயைக் கொலை செய்த இளைஞர்!
அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சடலத்தின் அருகே தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில், சிறுவயதில் மகிழ்ச்சியாக இருந்தேன் அல்லது கனவில் மகிழ்ச்சியாக இருந்தேன் என எழுதப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த தற்கொலைக்கான தெளிவான காரணம் அதில் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திவ்யா உடன் பயிலும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவியின் மொபைல் போனும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.