பாராட்டுகளைப் பெறும் பாதல் லோக் - 2!
பிரபல இணையத் தொடரான பாதல் லோக்கின் இரண்டாவது சீசன் ஓடிடியில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இணையத் தொடர் பாதல் லோக் (paatal lok). இயக்குநர்கள் அவினாஷ் அருண், ப்ரோசித் ராய் இயக்கத்தில் உருவான இத்தொடரில் ஒரு பத்திரிகையாளரின் பார்வையிலிருந்து கொலைகளும், அதன் பின்னணிகளும் விரிவாக அலசப்பட்டிருக்கும்.
இந்தியளவில் இதுவரை வெளியான தொடர்களில் பாதல் லோக் தனித்துவமான இடத்தையே பெற்றிருக்கிறது. நடிகர்கள் ஜெய்தீப் அலாவத், அபிஷேக் பானர்ஜி, நீரஜ் கபி உள்ளிட்டோர் நடிப்பில் கிரைம், திரில்லர் பாணியில் இத்தொடர் உருவாகியிருந்தது.
இதையும் படிக்க: தனியாக இசைக் கச்சேரி நடத்தும் சித்ரா!
முதல் சீசனில் ஒரு திருப்பத்துடன் தொடர் நிறைவடைந்ததால் அதன் இரண்டாம் பாகம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால், அதற்கான படப்பிடிப்புகள் சில மாதங்களாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், அவினாஷ் அருண் இயக்கிய பாதல் லோக் தொடரின் இரண்டாவது சீசன் அடுத்தாண்டு ஜனவரி 17 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது.
முதல் பாகத்தைப் போன்றே திருப்பங்களும் பரபரப்பும் நிறைந்திருப்பதாக இரண்டாம் பாகத்திற்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. முக்கியமாக, நடிகர் ஜெய்தீப் அலாவத்தின் நடிப்பு பிரம்மிக்க வைத்ததாகவும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.