செய்திகள் :

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?

post image
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், கொல்கத்தா நீதிமன்றம் குற்றவாளிக்கு தண்டனை விதித்திருக்கிறது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.

சஞ்சய் ராய்
சஞ்சய் ராய்

இந்த விவகாரத்தில் மேற்குவங்க அரசு உண்மையை மறைப்பதாகவும், குற்றவாளியை காப்பாற்ற முயன்றதாகவும் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன. நீதி கேட்டு மேற்குவங்க மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் எல்லாம் நடத்தினர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கியிருந்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் 64, 66 மற்றும் 103 (1) பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

சஞ்சய் ராய்
சஞ்சய் ராய்

விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிந்தது. இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் வரும் திங்கள் கிழமை வெளியாகும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று ( ஜனவரி 20) நீதிமன்றம் சஞ்சய் ராய்க்கு 50,000 ரூபாய் அபராதமும், சாகும் வரையில் சிறை எனும் ஆயுட்காலத் தண்டனையும் வழங்கி இருக்கிறது.

`நீதிமன்றங்களில் அனைத்து பாலருக்குமான கழிவறை வசதியை மேம்படுத்துங்கள்!' - உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியா முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் ஆண், பெண், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும்அடிப்படைத்தேவையான `கழிப்பறை'கள் தனித்தனியாய் இருத்தல் வேண்டும் எ... மேலும் பார்க்க

`ஒரு கோடி ரூபாய் நிலத்துக்கு, இழப்பீடு வெறும் இரண்டு லட்சம்!' - ஏமாற்றப் பார்த்த அரசாங்கம்...

- தூரன்நம்பி நம்மிடம் உங்களிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கிய ஒருவர், ஒரு பைசாகூட கொடுக் காமல் இழுத்தடித்து, இன்றைக்குத்தான் பணம் கொடுக்கிறார். ஆனால், நிலத்தை வாங்கிய அன்றைய தேதியி... மேலும் பார்க்க

கலப்பு திருமணம் செய்து கொண்ட கணவரின் சகோதரி... விவாகரத்து கோரிய பெண் - வழக்கில் நடந்தது என்ன?

இன்றையக் காலகட்டத்தில், சில நேரங்களில் விவகாரத்துக்கான காரணங்களை நாம் கேள்விபடும்போது சில சமயங்களில் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது. அந்த வகையில் பெண் ஒருவர் தனது கணவரின் சகோதரி வேறு சமூக... மேலும் பார்க்க

LGBTQIA++: ``தன்பாலின உறவுகள் பழங்காலத்திலிருந்தே அங்கீகரிக்கப்பட்டுள்ளன'' -உச்ச நீதிமன்ற நீதிபதி

தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என LGBTQIA++ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தன்பாலின உறவு குற்றமல்ல என 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்... மேலும் பார்க்க

`இலவசங்களுக்கு நிதி இருக்கிறது; ஆனால் நீதிபதிகள் சம்பளத்துக்கு...' - மாநில அரசுகளை சாடிய நீதிமன்றம்!

வரவிருக்கும் டெல்லி சட்டசபைத் தேர்தலையொட்டி, உச்ச நீதிமன்றம் தேர்தல் இலவசங்கள் மற்றும் வாக்குறுதிகள் குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. நீதிபதிகளின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை நிறைவேற்றுவதை... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: `18 மீதான குண்டர் சட்டம் ரத்து!' - சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், மாநில அளவில் பெரும் பிரச்னையாக வெடித்தது. இந்த விவகாரத்தில், மாவட... மேலும் பார்க்க