செய்திகள் :

LGBTQIA++: ``தன்பாலின உறவுகள் பழங்காலத்திலிருந்தே அங்கீகரிக்கப்பட்டுள்ளன'' -உச்ச நீதிமன்ற நீதிபதி

post image

தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என LGBTQIA++ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தன்பாலின உறவு குற்றமல்ல என 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து, தன்பாலின திருமணங்களை சிறப்பு திருமணச் சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய அரசியல் சாசன அமர்வு கடந்த 2023-ம் ஆண்டு, ``தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க உச்சநீதிமன்றத்தால் முடியாது. இதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க முடியும். அதேநேரம், தன் பாலின ஈா்ப்பாளா்களுக்கு சம உரிமை அளித்து, சமூகத்தில் உள்ள பாகுபாடுகளைக் களைய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

தன்பாலின உறவு

இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என 3 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த், பி.வி.நாகரத்னா, பி.எஸ்.நரசிம்மா, தீபங்கா் தத்தா ஆகியோா் கொண்ட அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ``தன்பாலின திருமண விவகாரத்தில் வெளியிடப்பட்ட 2 தீா்ப்புகளும் சட்டத்துக்கு உள்பட்டவை. அவற்றில் எந்தத் தவறும் இல்லை. தீா்ப்புகளில் தணிக்கை செய்யவோ, மறு ஆய்வு செய்யவோ எதுவுமில்லை என்பதால் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தனா்.

தன் பாலின திருமணம்

தீர்ப்பின் போது பேசிய நீதிபதி கவுல், ``பாலியல் செயல்பாடுகளுக்கு மட்டுமல்ல, உணர்ச்சிப் பூர்த்திக்கான உறவுகளாகவும் ஒரே பாலின உறவுகள் பழங்காலத்திலிருந்தே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தலைமை நீதிபதியின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீதிமன்றம் சமூக ஒழுக்கத்தால் அல்ல, அரசியலமைப்பு ஒழுக்கத்தால் வழிநடத்தப்படுகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`இலவசங்களுக்கு நிதி இருக்கிறது; ஆனால் நீதிபதிகள் சம்பளத்துக்கு...' - மாநில அரசுகளை சாடிய நீதிமன்றம்!

வரவிருக்கும் டெல்லி சட்டசபைத் தேர்தலையொட்டி, உச்ச நீதிமன்றம் தேர்தல் இலவசங்கள் மற்றும் வாக்குறுதிகள் குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. நீதிபதிகளின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை நிறைவேற்றுவதை... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: `18 மீதான குண்டர் சட்டம் ரத்து!' - சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம், மாநில அளவில் பெரும் பிரச்னையாக வெடித்தது. இந்த விவகாரத்தில், மாவட... மேலும் பார்க்க

Simply சட்டம்: `உயில் தொடர்பாக வரும் பிரச்னைகள் என்னென்ன?’ - சொத்து வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை!

சட்டத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது `சிம்ப்ளி சட்டம்' தொடர். எப்படி ஒரு சொத்தை பாதுகாப்பாக வாங்குவது என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கிறார், ஜோல்விட் (Zolvit) நிறுவ... மேலும் பார்க்க

"பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை தர வேண்டும்" - டெல்லி நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமைகள், ஆசிட் வீச்சு, போக்சோ (POCSO) குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு/உயிர் பிழைத்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை வழங்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

பரோலில் வந்து நண்பரைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்; யார் இந்த காட்டேரி சுடலைமுத்து?

தூத்துக்குடி, மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து என்ற காட்டேரி சுடலை முத்து. கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது மாவட்ட முதன்மை நீத... மேலும் பார்க்க

Simply சட்டம்: `பெண்களுக்கு சொத்துக்களில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது? சட்டம் சொல்வது என்ன?’

சட்டத்தை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது `சிம்ப்ளி சட்டம்' தொடர். எப்படி ஒரு சொத்தை பாதுகாப்பாக வாங்குவது என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கிறார், ஜோல்விட் (Zolvit) நிறுவ... மேலும் பார்க்க