செய்திகள் :

மாநிலங்களுக்கு ரூ.1.73 லட்சம் கோடி வரி பங்கு விடுவிப்பு; தமிழகத்துக்கு ரூ.7,057 கோடி

post image

மாநில அரசுகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1.73 லட்சம் கோடி வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.7,057 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொகுப்பிலிருந்து கிடைக்கும் வரியிலிருந்து மாநில அரசுகளுக்கான தேவைகள், மாநிலங்கள் அதனை எந்தெந்த தேவைகளுக்கு செலவிடப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கலந்தாலோசித்து நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த வரி பகிர்வு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், அவர்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கும் இந்த மாதம் அதிக தொகை ஒதுக்கப்படுகிறது என்று நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.1,73,030 கோடியை மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், இதே டிசம்பர் மாதம் 2024ஆம் ஆண்டு மத்திய அரசு ஒதுக்கிய தொகை 89,086 கோடி என்றும் நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.

தற்போது, மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதத்தை, மாநில அரசுகளுக்கு தவணை முறையில் பகிர்ந்தளித்து வருகிறது.

அவதூறு வழக்கில் ராகுலுக்கு புணே நீதிமன்றம் ஜாமீன்

சாவர்க்கர் குறித்த அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகு காந்திக்கு புணே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.முன்னதாக இந்த வழக்கு புணே சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ஆட்டோ கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் காயம்

ஜார்க்கண்டில் ஆட்டோ கவிழ்ந்ததில் 12 தொழிலாளர்கள் காயமடைந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை பயணித்த ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. இந... மேலும் பார்க்க

நானும் மனிதன்தான், தவறு செய்திருக்கலாம்: பிரதமர் மோடியின் முதல் நேர்காணல்

புது தில்லி: இணையதள சேனல் ஒன்றுக்காக, முதல் முறையாக, நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து பேசியிருக்கிறார்.சில்லறை பங்கு தரகில் ஈடுபடும் ஜெரோதாவின் இணை நிறுவனரும் தொழிலதிபரும... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்: முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ்

ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார். ஒடிசா ஆளுநராக பதவி வகித்து வந்த ரகுபர் தாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அந்த பதவியை ராஜிநாமா செய்... மேலும் பார்க்க

இழுபறியாகும் ராகுல் வழக்கு!

ராகுல் காந்தி மீது 2018 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கு ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.கர்நாடகத்தில் 2018 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக நிர்வாகி மீதான ஆட்சேபகரமான கருத்துகள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள், வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் கடந்த 3 ந... மேலும் பார்க்க