ஒன்ஸ் மோர் பட புதிய பாடல்!
ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள ஒன்ஸ் மோர் திரைப்படம் இன்றைய கால இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. நாயகனாக அர்ஜுன் தாஸும் நாயகியாக அதிதி ஷங்கரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்த பில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதையும் படிக்க: கார் பந்தயம் முடியும் வரை நடிக்க மாட்டேன்! -நடிகர் அஜித்
முன்னதாக, இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், ஒன்ஸ் மோர் படத்தின் புதிய பாடலான ‘வா கண்ணம்மா’ பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இப்பாடலுக்கான வரிகளை விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ளார். பாடலை ஹெஷாம் அப்துல் வஹாப், உத்தாரா உன்னி கிருஷ்ணன் பாடியுள்ளார்.