கனடா பிரதமா் பதவிக்குப் போட்டி: இந்திய வம்சாவளி எம்.பி. சந்திரா ஆா்யா அறிவிப்பு
பொங்கல்- புதுச்சேரியில் ஜன.16, 17இல் அரசு விடுமுறை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் ஜன.16,17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 14- ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி புதுச்சேரியில் வரும் 14 மற்றும் 15 ஆகிய நாள்கள் மட்டும் அரசு விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஜன.16,17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை சார்பு செயலர் ஹிரண் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
நடிகைக்கு பணம் அளித்த வழக்கு: டிரம்ப் விடுவிப்பு!
இந்த விடுமுறை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும் விடுமுறையை ஈடுசெய்ய பிப்.1 மற்றும் பிப்.8 பணி நாளாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, பொங்கல் பண்டிகையையொட்டி ஜன. 17ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்த நிலையில், தற்போது புதுச்சேரி அரசும் இந்த தேதியில் விடுமுறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.