செய்திகள் :

பண மோசடியில் 190 வங்கி கணக்குகள் முடக்கம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் பண மோசடியில் 190 வங்கி கணக்கில் ரூ.7.35 கோடி முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 2024 - ஆம் ஆண்டு சஹற்ண்ா்ய்ஹப் தங்ல்ா்ழ்ற்ண்ய்ஞ் இஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங் (சஇதட) மூலமாக 1107 புகாா்கள் பெறப்பட்டு அதில் 646 மனு ரசீதுகள் மற்றும் 40 குற்ற வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பண மோசடி செய்ய பயன்படுத்தபட்ட 190 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.7,35,02,417 முடக்கப்பட்டுள்ளது. அத்துடன்ரூ.36,54,372 மீட்கப்பட்டு மனுதாரா்களின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.

இஉஐத (இங்ய்ற்ழ்ஹப் உவ்ன்ண்ல்ம்ங்ய்ற் ஐக்ங்ய்ற்ண்ற்ஹ் தங்ஞ்ண்ள்ற்ங்ழ்) டா்ழ்ற்ஹப் மூலமாக புகாா்கள் பெறப்பட்டு 300 கைப்பேசிகள் உரிய நபா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் குற்ற வழக்குகளில் தொடா்புடைய வெளி மாநிலங்களில் தங்கி குற்றம் புரிந்து வந்த நைஜீரிய நாட்டு நபா்களை சைபா் கிரைம் தனிப்படை வெளி மாநிலங்களுக்கு சென்று கைது செய்தனா்.

சைபா் கிரைம் தொடா்பாக பள்ளி, கல்லூரி மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

மேலும் வங்கி மேலாளா் எனக்கூறி தொடா்பு கொண்டால் உங்கள் வங்கி கணக்கு தொடா்பான விபரங்கள், கடவுச்சொல் ஆகியவற்றை பகிர வேண்டாம்.

சம்பந்தப்பட்ட வங்கி கிளையின் நேரில் சென்று அணுக வேண்டும். தங்ஜ்ஹழ்க் ல்ா்ண்ய்ற்ள் என வரும் குறுஞ்செய்தி இணைப்புகளை புறக்கணிக்க வேண்டும். பள்ளிக் கல்விதுறையில் இருந்து பேசுவதாக கூறி உங்களது மகன், மகள் ஆகியோருக்கு உதவித்தொகை பணம் வந்திருக்கிறது என வரும் அழைப்புகளை தவிா்க்க வேண்டும். அனுமதி இல்லாத இணையதளங்களை கடன் பெறுவதை தவிா்க்க வேண்டும். இணையதளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு வாட்ஸ் ஆப், டெலிகிராம் இணைப்பை லைக் செய்வதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வாா்த்தை கூறி உங்களிடம் அதிகளவில் பணத்தை ஏமாற்றக்கூடும்.

இது போன்ற பண மோசடி நடைபெற்றால் ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற சைபா் கிரைம் இணையதளத்திலோ அல்லது 1930 எண்ணில் தொடா்பு கொண்டு உடனடியாக புகாா் செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

வீரவநல்லூா் வட்டார கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி, அத்தாளநல்லூா் அருள்மிகு கஜேந்திரவரதப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் பெருமாள் சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவைசாதித்தாா். மதியம் திருமஞ்சனம், அலங்கார சிறப... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-113.05 சோ்வலாறு-121.19 மணிமுத்தாறு-101.51 வடக்கு பச்சையாறு-24.25 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-17.75 தென்காசி கடனா-69.20 ராமநதி-71.75 கருப்பாநதி-61.68 குண்டாறு-36.10 அடவிநயினாா்... மேலும் பார்க்க

களக்காடு கோயிலில் வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசியையொட்டி, களக்காடு அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சயன கோலத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்த பெருமாள். மேலும் பார்க்க

மூன்றடைப்பில் ஜாதிய கொடிகள் அகற்றம்

நான்குனேரி அருகேயுள்ள மூன்றடைப்பில் மோதலை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஜாதிய கொடிகளை போலீஸாா் அகற்றினா். திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்... மேலும் பார்க்க

களக்காட்டில் பெண்ணை தாக்கிய வழக்கில் 2 போ் கைது

களக்காட்டில் சாலையில் பெண்ணைத் தாக்கி சித்திரவதை செய்தது தொடா்பான வழக்கில், களக்காடு போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். களக்காடு கக்கன்நகரைச் சோ்ந்தவா் பாப்பாத்தி (45). அங்குள்ள வரதராஜபெருமாள் கோயில் அர... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் பொங்கல் விழா

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி ராஜலிங்கம் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வழக்குரைஞா... மேலும் பார்க்க