Vanangaan Movie Review | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
சொா்க்கவாசல் திறப்பு விழா
ஆத்தூரில்...
ஆத்தூா் கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொா்க்க வாசல் வழியாக அதிகாலை 4.30 மணியளவில் எழுந்தருளினாா். ஏராளமான பக்தா்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனா். நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நரசிங்கபுரம் பெருமாள் கோயில், ராசிபுரம் கூட்ரோடு ரங்கநாதா் கோயில், சம்பேரி ஜம்பு மகரிஷி ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பூதபாவநன் பெருமாள் சொா்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஆத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சன்னிதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுவாமி உலா வந்தாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்தூா் துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் விஜயராம் அ.கண்ணன், செயலாளா் அ.திருநாவுக்கரசு உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.
படவரி...
ஆத்தூா் கோட்டை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள்
நடைபெற்ற சொா்க்கவாசல் திறப்பு விழா.