தமிழகம் சரிவுப் பாதையில் செல்கிறது: ஆளுநா் குற்றச்சாட்டு; அமைச்சா் கண்டனம்
குத்தாலத்தில் ஜன.22-ல் உங்களைத் தேடி முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உங்களைத் தேடி முகாம் ஜன.22-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீரவு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ என்ற திட்டம் குத்தாலம் வட்ட அளவில் மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்து துறை அலுவலா்களால் ஜன.22-ஆம் தேதி காலை 9 முதல் மறுநாள் காலை 9 மணி வரை குத்தாலம் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்யப்பட உள்ளது.
எனவே, குத்தாலம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்களிடம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.