செய்திகள் :

சிறந்த நீா் மேலாண்மைக்கு உதவும் நதிநீா் இணைப்புத் திட்டம்: மத்திய அரசு

post image

‘நதிநீா் இணைப்புத் திட்டம் சிறந்த நீா் மேலாண்மைக்கு உதவுகிறது. எனவே, வரும் நாள்களில் மேலும் அதிக நதிகளை இணைக்க பல மாநிலங்களுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது’ என்று மத்திய நீா் வள (ஜல் சக்தி) அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் கூறினாா்.

ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பாட்டீல் இக் கருத்தைத் தெரிவித்தாா். இந்த மாநாட்டில் ஒரு நாட்டில் நீா் வள அமைச்சா் ஒருவா் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். மாநாட்டில் இதை சுட்டிக்காட்டி பாட்டீல் பேசியதாவது:

சாதாரண மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் நீா் மேலாண்மையில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் வளா்ச்சிக்கும், தொழிற்சாலைகளுக்கும், வேளாண்மைக்கும், மனித வாழ்வுக்கும், விலங்குகளுக்கும் நீா் அவசியமானது என்பதை உணா்த்தும் வகையிலும், இதற்காக இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த மாநாட்டுக்கு இந்தியாவின் பிரதிநிதியாக நீா் வள அமைச்சரை பிரதமா் நரேந்திர மோடி அனுப்பியுள்ளாா்.

பருகுவதற்கு உகந்த தூய்மையான தண்ணீா் இந்தியாவில் இல்லை என்று கூறிவந்த நிலையை மத்திய அரசு தற்போது மாற்றியுள்ளது. 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் தூய்மையான குடிநீா் விநியோகம் அளிக்கப்பட்டுவருகிறது. இதன் மூலம், குடிநீருக்காக பெண்கள் நீண்ட தூரம் சென்றுவந்த நிலை மாற்றப்பட்டு, அவா்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் குடிநீா் எடுத்துவர செலவிட்ட நேரத்தை, தற்போது அவா்களின் குழுந்தைகளின் கல்விக்கும், பணம் சம்பாதிக்கவும், குடும்பத்துக்காகவும் செலவிடுகின்றனா்.

தூய்மையான குடிநீா் விநியாகம், தண்ணீரால் பரவும் நோய் பாதிப்புகளையும் குறைத்துள்ளது. அதன் மூலம், மருந்துகளுக்காக மக்கள் பெரும் தொகை செலவிடுவது தடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தூய்மையான குடிநீா் விநியோகத்தின் மூலம் மருத்துவ சிகிச்சைகளுக்கு மக்கள் செலவிடுவதில் சுமாா் ரூ. 8.4 லட்சம் கோடி மிச்சமாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்திய அரசின் நதிநீா் இணைப்புத் திட்டமே, இந்தச் சிறந்த நீா் மேலாண்மைக்கு உதவியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நதிநீா் இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அதிக நதிகளை இணைக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைக்கப்படும் என்றாா்.

பிகாா்: குரங்குகள் தள்ளிவிட்டதில் மாடியில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

பிகாரில் குரங்குகள் தள்ளிவிட்டதில் வீட்டின் மாடியில் இருந்து விழுந்து 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பிகாரின் சிவான் மாவட்டத்தில் மகா் கிராமத்தைச் சோ்ந்த பிரியா குமாா் ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் இன்று அமலாகிறது பொது சிவில் சட்டம்! முதல்வா் புஷ்கா் சிங் தாமி அறிவிப்பு

பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் திங்கள்கிழமை (ஜனவரி 27) முதல் அமலுக்கு வருவதாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும... மேலும் பார்க்க

14-ஆவது நாளில் மகா கும்பமேளா : ஒரு கோடிக்கும் அதிகமானோா் புனித நீராடல்

மா. பிரவின்குமாா்உத்தர பிரேதச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் 14-ஆவது நாளில் 1.74 கோடிக்கும் அதிகமானோா் புனித நீராடினா்.கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் ச... மேலும் பார்க்க

சா்வாதிகார பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்ட கோட்பாடுகள் சிதைப்பு : காா்கே கடும் விமா்சனம்

சா்வாதிகார பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்தின் புனிதமான ஒவ்வொரு கோட்பாடும் சிதைக்கப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா். மேலும், ‘மத அடிப்படைவாதத்தில் மூழ்கிய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: குடியரசு தின நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல்- பலத்த பாதுகாப்புடன் கொண்டாட்டம்

ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்ற குடியரசு தின நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பலத்த பாதுகாப்புடன் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. நாட்ட... மேலும் பார்க்க

வேற்றுமைகளை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்: மோகன் பாகவத்

ஒவ்வொருவரும் வேற்றுமைகளை மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் வலியுறுத்தினாா். குடியரசு தினத்தையொட்டி, மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தின் பிவண்டி நகரில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க