செய்திகள் :

உத்தரகண்டில் இன்று அமலாகிறது பொது சிவில் சட்டம்! முதல்வா் புஷ்கா் சிங் தாமி அறிவிப்பு

post image

பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் திங்கள்கிழமை (ஜனவரி 27) முதல் அமலுக்கு வருவதாக முதல்வா் புஷ்கா் சிங் தாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலம் உத்தரகண்ட்.

திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, வாரிசுரிமை ஆகிய விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திலும் தனித்தனி சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதை மாற்றி, அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்றும் வகையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

உத்தரகண்டில் கடந்த 2022-இல் நடந்த பேரவைத் தோ்தலின்போது, மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இத்தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. உத்தரகண்டில் ஆளுங்கட்சி தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது அதுவே முதல்முறையாகும்.

பொது சிவில் சிட்ட வரைவு: மாநில முதல்வராக புஷ்கா் சிங் தாமி பதவியேற்ற பின் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்ட வரைவை உருவாக்க நிபுணா் குழு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2022, மே 27-இல் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டறிந்த இக்குழு, ஒன்றரை ஆண்டுக்கு பின் விரிவான சட்ட வரைவை சமா்ப்பித்தது.

மசோதா நிறைவேற்றம்: இதையடுத்து, மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டது. பின்னா், சட்ட அமலாக்கத்துக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுக்க முன்னாள் தலைமைச் செயலா் சத்ருஹன் சிங் தலைமையில் நிபுணா் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை சமா்ப்பித்த நிலையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் தேதியை முடிவு செய்ய முதல்வருக்கு அதிகாரமளித்து, மாநில அமைச்சரவை முடிவு மேற்கொண்டது.

இன்றுமுதல் அமல்: இந்நிலையில், முதல்வா் புஷ்கா் சிங் தாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

உத்தரகண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கான பயிற்சியும் நிறைவடைந்துவிட்டது. இச்சட்டம் திங்கள்கிழமைமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.

சமூகத்தில் சீரான தன்மையை கொண்டுவந்து, குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள் மற்றும் பொறுப்புகளை இச்சட்டம் உறுதி செய்யும். வளா்ச்சியடைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட, நல்லிணக்கமான, தற்சாா்புகொண்ட தேசத்தைக் கட்டமைக்க பிரதமா் நரேந்திர மோடி நடத்திவரும் மாபெரும் ‘வேள்வியில்’ ஓா் அா்ப்பணமே எங்கள் மாநிலத்தின் பொது சிவில் சட்டம் என்று முதல்வா் தாமி குறிப்பிட்டுள்ளாா்.

உத்தரகண்டில் அமலாகும் பொது சிவில் சட்டத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள அஸ்ஸாம் உள்ளிட்ட பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்கள் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அம்சங்கள் என்னென்ன?

உத்தரகண்டில் பழங்குடியினா் தவிா்த்து பிற மக்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் பொருந்தும். இச்சட்டத்தின்படி, திருமணப் பதிவு மட்டுமன்றி திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வோரும் அரசிடம் முறையாகப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும். இணையவழியில் இப்பதிவை மேற்கொள்ள முடியும்.

விவாகரத்துக்கான காரணங்கள், மறுமணம், ஜீவனாம்சம் தொடா்பாக பொது விதிமுறைகளை உறுதிசெய்யும் இச்சட்டம், பலதார மணம் மற்றும் ஹலாலா நடைமுறையை தடை செய்கிறது.

பாலின சமத்துவத்தை முக்கிய அம்சமாக கொண்ட இச்சட்டம், ஆண்கள்-பெண்களுக்கு ஒரே போன்ற குறைந்தபட்ச திருமண வயது, ஆண்-பெண் குழந்தைகளுக்கு சமமான சொத்துரிமையை உறுதி செய்கிறது. செல்லுபடியாகாத திருமணத்தில் பிறந்த குழந்தைகளையும் சட்டபூா்வ வாரிசாக கருத வழிவகை செய்வதோடு, உயில் தயாரிப்பு நடைமுறைகளையும் எளிதாக்குகிறது.

இளம்பெண் கொலை: சூட்கேஸில் அடைத்து எரிக்கப்பட்ட உடல் மீட்பு: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

குடியரசு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) தேசியத் தலைநகர் புது தில்லியில் கொடூர கொலை அரங்கேறியுள்ளது. காஸிபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாதி எரிந்த நிலையில் மனித சடலம் அடங்கிய சூட்க... மேலும் பார்க்க

கங்கையில் குளித்தால் வறுமை ஒழியாது: அமித் ஷாவுக்கு கார்கே பதில்

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடிய நிலையில், கங்கையில் குளிப்பதால் வறுமையை ஒழித்துவிட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வி... மேலும் பார்க்க

பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

கொல்கத்தா : கொல்கத்தாவில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆர். ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலில் 2 பக்தர்கள் பலி!

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்காக கத்திருந்த இருவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. அயோத்தியில் பிரசித்தி பெற்ற ராமர் கோயிலில் குழந்தை ராமரின் சிலை பிராணப... மேலும் பார்க்க

பொது சிவில் சட்டம்: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் பதிவு செய்வது கட்டாயம்!

பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலானதைத் தொடர்ந்து, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கா் சிங் த... மேலும் பார்க்க

ஸோஹோ தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ராஜிநாமா!

ஸோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஸோஹோ மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவர் மென்பொருள் நிறுவனத்தின் 'தலைமை விஞ்ஞானி' என்ற முறையில் ஆராய்ச்சி மற்றும் ... மேலும் பார்க்க