நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
யுகபாரதி: "நிலவே, மலரே இல்ல; பிசாசே, பிடாரியே என்கிறார்" - மஹா பிடாரி நூல் வெளியீட்டில் கஸ்தூரி ராஜா
கடந்த வெள்ளிக்கிழமை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பாடலாசிரியர் யுகபாரதியின் 'மஹா பிடாரி' நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விகடன் குழுமம் மற்றும் எஸ்.ஆர்.எம் ஊடகவியல் துறை இணைந்து நடத்திய இவ்விழாவில் மாணவர்கள், வாசிப்பாளர்கள், பிரபலங்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
120 கவிதைகளின் தொகுப்பான மஹா பிடாரி அனைவருக்குமான காதல் கவிதை நூல் என்றே சொல்லலாம். காதலையும் தாண்டி அதனுள் இருக்கும் சமூக பார்வையையும் பொருத்தி எழுதியிருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும். இயக்குநர் மற்றும் பாடலாசிரியரான கஸ்தூரி ராஜா இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கஸ்தூரி ராஜா பேசியபோது,
"யுகபாரதி அப்படின்ற பேரு நிறைய இடங்களில் கேள்வி பட்டிருக்கேன். ஆனால் இப்பேர்பட்ட பாடல்கள் எல்லாம் எழுதியிருக்காரு என்கிறது போக போகத்தான் தெரிந்தது. பழைய காலத்து ஆள் என்பதால் இக்கால கவிஞர்களை நான் அதிகமா கவனிச்சதில்ல இன்னும் அந்த மண் வாசனையை விட்டு வெளியே வரல. இப்போ சசிகுமார் சொன்னதும் தான் 'சம்போ சிவ சம்போ' எழுதியது இவர்தான்னு தெரிஞ்சது. அடடா அப்படி ரசிச்ச வரிகள். அந்த பாடல் எழுதின இவர் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறது பொறாமைய இருக்கு" என்றார்.
தொடர்ந்து புத்தகத்தைப் பற்றி பேசியவர்,
"புத்தகத்தின் தலைப்பில்லையே எனக்கு மாற்றுக் கருத்து இருக்கு. 'காதல் பிசாசு' பாட்டுல இருந்து, இப்போ பிடாரி காதல் வரை. காதல் என்றாலே உங்களுக்குப் பிசாசுதான் ஞாபகம் வருமா? பொதுவாவே பெண்களை மலரே, தென்றலே, நிலவே இப்படிதான் காதலில் வர்ணிக்கணும். நீங்க பிடாரினு எல்லாம் சொன்னால் எந்த பெண் உங்களைக் காதலிப்பார்கள்? உங்க காதல் கவிதைகளில் என்ன இல்லைனா, கண்ணோடு கண் பார்த்தல், கருத்தோடு ஒருமித்தல், கட்டி அணைத்தல், தனிமையில் தழுவுளாவுதல் இதெல்லாம் இல்லவே இல்ல.
ஒரு கரடுமுரடான காதல், ஆனால் வாசிக்கும் போது நம்ம எல்லாரையும் கைப்பிடிச்சு கூட்டிட்டு போறாரு. இந்த வாசிப்பு என்பது ஒரு கொடூரமான பழக்கம். அதுவும் பழக்கம் இல்லாதவன் உட்கார்ந்தான அதை விட தண்டனை வேற எதுவுமே இல்லை. இவருடைய இந்த கவிதைகளை வாசிக்கும்போது ஒவ்வொரு வார்த்தையும் அந்த இடத்துக்கு நம்மள கூட்டிட்டு போகிறது. வார்த்தைகள் ஒவ்வொன்றுமே எதார்த்தத்துல புழங்கிட்டு இருக்கக்கூடிய வார்த்தைகள். பிடாரி கூட பரவாயில்ல ஆனால் மஹா பிடாரி தான்..." என்று புத்தகத்தின் மீதான விமர்சனத்தைக் கூறினார்.
கஸ்தூரி ராஜாவின் வருகையால் யுகபாரதி மிகவும் மகிழ்வடைந்தார் என்பது அவர் பேசியதில் வெளிப்பட்டது. "நான் பாடலாசிரியர் ஆனது வெவ்வேறு காரணங்கள் இருக்கிறதுல்ல முதல் காரணம் கஸ்தூரி ராஜா ஐயா. நடிகர் தனுஷின் தந்தையாகவும் செல்வராகவனின் தந்தையாகவும் தெரியுற மாதிரி என்னுடைய தந்தையாகவும் பல நேரங்களில் அவருடைய பாடல் வரிகளால் தெரிகிறார். 'எள்ளு வாய பூக்கலயே' பாட்டில் எள்ளு என்று தொடங்க வைத்தது ஐயா எழுதிய 'எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா'. 'தூதுவள இலை அரச்சி' இதுமாதிரி தூதுவளை அப்படின்ற சொல் பல்லவியில் முதல் சொல்லாக வரமாதிரி பாரதியும் எழுதல கண்ணதாசனும் எழுதல. நூறு வருஷம் தமிழ் சினிமால வந்ததில்லை. இப்படி காதலுடனும் மண்வாசனையுடனும் எழுதுகிறவர். அவர் என்னுடைய இந்த புத்தக விழாவில் கலந்து கொண்டது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி" என்றார் யுகபாரதி.
பேசிய பின் யுகபாரதி கஸ்தூரி ராஜா அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...