செய்திகள் :

திருக்குறள்: "அந்த காலத்திலேயே சமூக சீர்திருத்தம் செய்தவர் திருவள்ளுவர்’’ - விஐடி வேந்தர் விசுவநாதன்

post image
தமிழியக்கம் சார்பில், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி வேந்தரும் தமிழியக்கத்தின் தலைவருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்து, மாநில அளவில் நடத்தப்பட்ட கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, வேந்தர் விசுவநாதன் பேசுகையில், "ஆண்டுதோறும் திருவள்ளுவர் விழா நடத்துகிறோம். தமிழுக்கு நாம் சொந்தக்காரர்கள் என்பது பெருமையானது. அதைவிட, திருவள்ளுவர், திருக்குறள் நமக்குச் சொந்தமானது என்பது உயர்வானது. ஏனெனில், எல்லா நாட்டினரும், எல்லா மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நூலாக வள்ளுவர் நமக்குத் திருக்குறளைத் தந்துள்ளார். அவருக்கு உருவம் இல்லையா எனப் பலபேர், பலவிதமாக அவர் உருவத்தை வரைந்து கொண்டிருந்தனர்.

விஐடி வேந்தர் விசுவநாதன்
விஐடி வேந்தர் விசுவநாதன்

1960-ல் பாவேந்தர் பாரதிதாசன் முயற்சி எடுத்து, ஒரு படத்தை வரைய வேணுகோபால் சர்மாவிடம் கொடுத்தார். உதவியாக இருந்தது ராம.தமிழ்ச்செல்வன். அவர், என் சொந்த கிராமத்துக்கு அருகிலுள்ள உலகாசியைச் சேர்ந்தவர். அந்த ஓவியத்தைத் தமிழறிஞர்கள் மற்றும் மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை உள்ளிட்ட எல்லோருமே ஏற்றுக்கொண்டனர். மத்திய, மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டன. அதுதான் இன்றைய திருவள்ளுவர் படமாக இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என நினைப்பது சரியல்ல என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

சுவடியாக இருந்த திருக்குறள், முதன்முதலாக 1812-லும், அதன் பிறகு 1860-லும்தான் அச்சிடப்பட்டது. திருக்குறளில் 14 ஆயிரம் சொற்கள் இருக்கின்றன. அதில் 50 சொற்கள் வடமொழி எனக் கூறப்படுகிறது. கடவுளைப் பற்றி எழுதாத நூல் இதுதான். கடவுள் பெயரை இதில் எங்கும் குறிப்பிடவில்லை. 2013-ம் ஆண்டு வரை திருக்குறளுக்கு 497 உரைகள் எழுதப்பட்டுள்ளன.

இதுவரை 170 மொழிகளில் திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருக்குறள் முதன்முதலாக மலையாளத்திலும், அதன் பிறகு லத்தீனிலும் மொழி பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் 1886-ல் ஜி.யு.போப் மொழி பெயர்த்தார். 1941-ல் திருக்குறள் மாநாட்டைத் திருக்குறள் முனுசாமி நடத்தினார்.

சுதந்திரத்துக்குப் பிறகு 1949-ல் தந்தை பெரியார், திருக்குறள் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில், `தமிழனுக்கு மதம் தேவையென்றால், அது திருக்குறள் மதமாக இருக்க வேண்டும்’ என்று பேசினார் பெரியார். 1976-ல் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் கற்சிலையையும் கலைஞர் கருணாநிதி உருவாக்கினார்.

அதிகாரப்பூர்வ திருவள்ளுவர் படம்
அதிகாரப்பூர்வ திருவள்ளுவர் படம்

திருக்குறளைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ராமலிங்க அடிகளார் திருக்குறளை ஒரு இயக்கமாக மாற்றினார். திருக்குறளுக்கு மறைந்த முன்னாள் நிதியமைச்சர் நெடுஞ்செழியன் எழுதிய உரையை நீங்கள் படிக்க வேண்டும். தலைவர்கள் அத்தனை பேரும் திருக்குறளைப் போற்றினார்கள்; பாராட்டினார்கள். எல்லோரிடமும் திருக்குறள் சென்று சேர தமிழியக்கம் பாடுபடும். திருக்குறளை எல்லோரும் படிக்க வேண்டும். தமிழன் நல்லவனாகவும், வல்லவனாகவும் இருக்க வேண்டும். இப்போது, தமிழகத்தில் நல்ல ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த காலத்திலேயே சமூகத்தைச் சீர்திருத்தம் செய்தவர் திருவள்ளுவர். மொழியால் தமிழனாகவும், இனத்தால் திராவிடனாகவும், நாட்டால் இந்தியர்களாகவும் இருக்க வேண்டும். நம்மை நாம் மறந்துவிடக் கூடாது’’ என்றார் வேந்தர் கோ.விசுவநாதன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

யுகபாரதி: "நிலவே, மலரே இல்ல; பிசாசே, பிடாரியே என்கிறார்" - மஹா பிடாரி நூல் வெளியீட்டில் கஸ்தூரி ராஜா

கடந்த வெள்ளிக்கிழமை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பாடலாசிரியர் யுகபாரதியின் 'மஹா பிடாரி' நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விகடன் குழுமம் மற்றும் எஸ்.ஆர்.எம் ஊடகவியல் துறை இணைந்து நடத்திய இவ்விழாவில... மேலும் பார்க்க

புத்தகக் கடையைப் பூட்ட கட்ட(ட)ம் கட்டிய வெள்ளை அரசு - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி -19

அமெரிக்காவின் கறுப்பர்கள் மத்தியில் அறியப்பட்ட குடியுரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங்.1964-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிங்குக்கு வழங்கப்பட்ட பின் சர்வதேச அளவிலான செயற்பாட்டாளர்களால் அறியப்பட்ட... மேலும் பார்க்க

`ரசனை உயர்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல...' - யுகபாரதியின் `மஹா பிடாரி' கவிதைத் தொகுப்பு

காதல் கவிதை என்றாலே கஃபே, கடல், உயர்தர ஹோட்டல், திரையரங்கு என பெரும்பாலும் இவைகளை வைத்தே எழுதப்படும். ஆனால், யுகபாரதி சாராய நெடியும், மாமிச வாடையும் என எளிய மனிதர்கள் வாழ்வுடன் ஊடாடும் காதலையும், இதுவ... மேலும் பார்க்க

Yuga Bharathi : 'குடல்கறி சாப்பிட்டுக்கொண்டே காதலிக்கும்..!' - மஹா பிடாரி நூல் வெளியீட்டு விழா

மஹா பிடாரி நூல்காதல் என்றாலே கஃபே, கடல், உயர்தர ஹோட்டல், திரையரங்கு என பெரும்பாலும் இவைகளை வைத்தே எழுதப்படும். ஆனால் யுகபாரதி சாராய நெடியும், மாமிச வாடையும் என எளிய மனிதர்கள் வாழ்வுடன் ஊடாடும் காதலைப்... மேலும் பார்க்க

வேவு வளையத்தில் புத்தக உலகின் டான்; ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை - பகுதி 18

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் கறுப்பர்கள் திரளாக வாழும் நகரம் ஹார்லெம்.உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும், வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த நகரத்தைப் பார்த்துவிட வேண்டுமென கறுப்பர்கள் விரும்பும் ... மேலும் பார்க்க

பணத்தையும் இலக்கியத்தையும் ஒண்ணா போட்டு குழப்பிக்கமாட்டேன் - எழுத்தாளர் யூமா வாசுகி

பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் தங்கள் வாழ்க்கையை மாற்றிய ஒரு மனிதர், ஒரு வாசகம், ஒரு சம்பவம் பற்றி மனம் திறந்து பகிர்ந்து கொள்ளும் வீடியோ தொடர் இது! மேலும் பார்க்க