நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு
கொல்கத்தா : கொல்கத்தாவில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆர். ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயைக் குற்றவாளி என உறுதி செய்ததுடன், சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து, மாநில அரசு தரப்பிலும் இன்னொருபுறம் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ தரப்பிலும் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று(ஜன. 27) நடைபெற்ற நிலையில், ஒரே நோக்கத்துக்காக எதற்காக இருதரப்பிலிருந்தும் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தேபாங்சு பசக் மற்றும் எம்.டி. ஷாபர் ரசிடி அடங்கிய அமர்வு வினவியது.
அதனைத்தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இவ்வழக்கில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.