இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதை வென்ற ஸ்மிருதி மந்தனா!
கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதினை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஸ்மிருதி மந்தனாவுக்கு இந்த ஐசிசி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா, கடந்த ஆண்டு 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 747 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஓராண்டில் ஸ்மிருதி மந்தனா குவித்துள்ள அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
இதையும் படிக்க: 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
ஒருநாள் போட்டிகளில் கடந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெருமையும் ஸ்மிருதி மந்தனாவையேச் சேரும். அவர் கடந்த ஆண்டில் மட்டும் 747 ரன்கள் குவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, லாரா வோல்வர்ட் (697 ரன்கள்), டம்மி பீமௌண்ட் (554 ரன்கள்) மற்றும் ஹேலி மேத்யூஸ் (469 ரன்கள்) ஆகியோர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அடுத்தடுத்து உள்ளனர்.