நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
2025-ல் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் தமிழ்ப் படங்கள்!
இந்தாண்டில் பல தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளன.
காலம் மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறது என்பது நமக்கும் நாம் பார்க்கும் திரைப்படங்களுக்கும் உள்ளே தொலைவுதான்போல. 2000 ஆம் ஆண்டு 25 ஆண்டுகளுக்கு முன் என்றால் கிள்ளித்தான் பார்க்க வேண்டும் என்கிற அளவிற்கு காலச்சுழல் சுழன்று அடிக்கிறது.
தமிழ் சினிமாவில் ஆண்டிற்கு 220-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானாலும் சில படங்களே நினைவில் தங்கும் இடத்தைப் பெறுகின்றன.
இதையும் படிக்க: சிம்புவின் அடுத்த படம்!
அப்படி, இந்தாண்டுடன் பல நல்ல தமிழ் கமர்சியல் படங்கள் திரைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளன.
அவற்றில் முக்கியமாக, ஜனவரியில் காதல் ரோஜாவே, கண்ணுக்குள் நிலவு, வானத்தைபோல ஆகிய படங்கள் 25 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன.
மேலும், பிப்ரவரியில் ஹேராம், முகவரி, மார்ச்சில் காக்கை சிறகினிலே, ஏப்ரலில் அலைபாயுதே, வல்லரசு, மே மாதம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், குஷி, ஜூனில் வெற்றி கொடி கட்டு படங்களும் ஜூலையில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, ஆகஸ்டில் பார்த்தேன் ரசித்தேன், மாயி, செப்டம்பர் மாதம் பாரதி, பட்ஜெட் பத்மநாதன், ரிதம், உயிரிலே கலந்தது, அக்டோபரில் பாளையத்து அம்மன், பிரியமானவளே, தெனாலி, நவம்பரில் சீனு, ஸ்நேகிதியே, டிசம்பரில் என்னவளே உள்ளிட்ட படங்கள் இந்தாண்டுடன் திரைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளன.
இவற்றில் ஹேராம், அலைபாயுதே, குஷி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ரிதம் ஆகிய படங்கள் மறுவெளியீடாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.