செய்திகள் :

இளம்பெண் கொலை: சூட்கேஸில் அடைத்து எரிக்கப்பட்ட உடல் மீட்பு: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

post image

குடியரசு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) தேசியத் தலைநகர் புது தில்லியில் கொடூர கொலை அரங்கேறியுள்ளது.

காஸிபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாதி எரிந்த நிலையில் மனித சடலம் அடங்கிய சூட்கேஸ் ஒன்று கிடப்பதைக் கண்ட சிலர், காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சூட்கேஸிலிருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம், சுமார் 20 - 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரது எனத் தெரிய வந்தது.

இதையடுத்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அந்த சடலம், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், குற்றவாளியை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

காவல் துறை துரிதமாகச் செயல்பட்டு மேற்கொண்ட தீவிர விசாரணையில், காஸியாபாத்தின் கோரா காலனியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர்களான அமித் திவாரியும் அனுஜ் குமாரும் சம்பவ இடத்திற்கு காரில் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, கால் டாக்ஸி ஓட்டுநரான அமித் திவாரியை கைது செய்த காவல் துறை அவரிடம் விசாரித்ததில், தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, கொல்லப்பட்டவர் 23 வயது ஷில்பா பாண்டே என்பது தெரிய வந்துள்ளது. இவர் அமித் திவாரியின் தந்தை வழி உறவு முறையில் அவருடைய முறைப்பெண் ஆவார்.

சூரத்திலுள்ள தன் வீட்டிலிருந்து கடந்தாண்டு நவம்பர் மாதம் வெளியேறிய ஷில்பா பாண்டே, தற்போது கைதாகியுள்ள அமித் திவாரியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், அமித் திவாரிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதால், அவரது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தன்னுடன் தனியாகக் குடித்தனம் நடத்த ஷில்பா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இல்லையெனில், தங்கள் இருவருக்குமிடையிலான உறவு குறித்து அவரது குடும்பத்திடம் தெரிவித்துவிடுவதாகவும் ஷில்பா மிரட்டியதாக அமித் திவாரி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சனிக்கிழமையன்று இரவு மது போதையில் இருந்த அமித் திவாரியுடன் ஷில்பா தகராறு செய்த நிலையில், அவரை தனது கையால் அடித்து மயக்கமடையச் செய்த திவாரி, அதன்பின் அவரது கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து தனது நண்பரான அனுஜ் குமாரை வீட்டிற்கு வரவழைத்து, அவர் உதவியுடன் இரவு 9 மணியிலிருந்து சனிக்கிழமை நள்ளிரவு வரை இருவரும் காரில் சடலத்தை ஏற்றிக் கொண்டு மறைவான இடத்தில் அந்த உடலை வீசிச் செல்ல சுற்றித் திரிந்துள்ளனர்.

குடியரசு நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சாலைகளில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததால் பதற்றமடைந்த இருவரும், ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கிக்கொண்டு தங்களிடமிருந்த பெரிய சூட்கேஸில் அந்த பெண்ணின் உடலை அடைத்து அதன்பின் காஸிபூர் காகித மண்டி பகுதியருகே சென்று அங்கே சூட்கேஸை சுற்றி வைக்கோலை பரப்பி, பின் சூட்கேஸை எரித்துள்ளனர்.

இந்த நிலையில், சூரத்திலுள்ள உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா் மோடி நம்பிக்கை

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால், நாட்டின் விளையாட்டுத் துறை புதிய உச்சத்தை எட்டும் என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அந்த வாய்ப்பை பெறுவதற்காக த... மேலும் பார்க்க

ஹிந்து நம்பிக்கைகள் அவமதிப்பு: கார்கேவுக்கு பாஜக கண்டனம்

உத்தர பிரதேச மாநிலம், திரிவேணி சங்கமத்தில் பாஜக தலைவர்கள் புனித நீராடியதை விமர்சனம் செய்ததன் மூலம் ஹிந்துகளின் நம்பிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதித்துள்ளார் என்று மகாராஷ்டிர பாஜக தல... மேலும் பார்க்க

பெரும் செல்வமுள்ள கட்சி பாஜக: ரூ.7,113 கோடி கையிருப்பு

பாஜகவிடம் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பாக ரூ.7,113 கோடி உள்ளது தோ்தல் ஆணையத்திடம் அக்கட்சி அளித்த ஆண்டு தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் பெரும் செல்வமுள்ள கட்சியாக பாஜக திகழ... மேலும் பார்க்க

கும்பமேளா: சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்

மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப்படாததால் மத்திய பிரதேசத்தின் சத்தா்பூரில் உள்ள 2 ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, ரயில்கள் மீது கற்களை வீசி தாக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: லட்சத்துக்கு மேற்பட்ட வங்கதேசத்தினருக்கு போலி பிறப்புச் சான்றிதழ்; கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை

மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவா்களும், மியான்மரில் இருந்து புகுந்த ரோஹிங்கயாக்களும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பெற்றுள்ளதாக எழுந்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இன்று மௌனி அமாவாசை புனித நீராடல்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித நீராடல் புதன்கிழமை (ஜன.29) நடைபெறுகிறது. உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 1... மேலும் பார்க்க