செய்திகள் :

பொது சிவில் சட்டம்: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் பதிவு செய்வது கட்டாயம்!

post image

பாஜக ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலானதைத் தொடர்ந்து, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் பதிவு செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கா் சிங் தாமி கூறியதாவது: ”திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும்(லிவ் - இன் டுகெதர் உறவு) மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நாங்கள் பறிக்கவில்லை. அத்தகைய உறவில் வாழும் இணையர்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்.

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. தில்லியில் கடந்த 2022-ஆம் ஆண்டு பதிவான ‘ஸ்ரத்தா - வாக்கர் கொலை வழக்கில்’, லிவ் இன் டுகெதர் தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில், அந்த தம்பதிகளுள் ஒருவர் இன்னொருவரை கொன்ற கொடூரமும் அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில், அதே போன்ற வழக்குகள் பதிவாகக் கூடாதென்பதற்கவே இத நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது” என்று பொருள்பட கூறியுள்ளார் உத்தரகண்ட் முதல்வர்.

பொது சிவில் சட்டத்திலுள்ளஅம்சங்கள் என்னென்ன?

உத்தரகண்டில் பழங்குடியினா் தவிா்த்து பிற மக்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் பொருந்தும். இச்சட்டத்தின்படி, திருமணப் பதிவு மட்டுமன்றி திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்வோரும் அரசிடம் முறையாகப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும். இணையவழியில் இப்பதிவை மேற்கொள்ள முடியும்.

விவாகரத்துக்கான காரணங்கள், மறுமணம், ஜீவனாம்சம் தொடா்பாக பொது விதிமுறைகளை உறுதிசெய்யும் இச்சட்டம், பலதார மணம் மற்றும் ஹலாலா நடைமுறையை தடை செய்கிறது.

பாலின சமத்துவத்தை முக்கிய அம்சமாக கொண்ட இச்சட்டம், ஆண்கள்-பெண்களுக்கு ஒரே போன்ற குறைந்தபட்ச திருமண வயது, ஆண்-பெண் குழந்தைகளுக்கு சமமான சொத்துரிமையை உறுதி செய்கிறது. செல்லுபடியாகாத திருமணத்தில் பிறந்த குழந்தைகளையும் சட்டபூா்வ வாரிசாக கருத வழிவகை செய்வதோடு, உயில் தயாரிப்பு நடைமுறைகளையும் எளிதாக்குகிறது.

இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா் மோடி நம்பிக்கை

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால், நாட்டின் விளையாட்டுத் துறை புதிய உச்சத்தை எட்டும் என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அந்த வாய்ப்பை பெறுவதற்காக த... மேலும் பார்க்க

ஹிந்து நம்பிக்கைகள் அவமதிப்பு: கார்கேவுக்கு பாஜக கண்டனம்

உத்தர பிரதேச மாநிலம், திரிவேணி சங்கமத்தில் பாஜக தலைவர்கள் புனித நீராடியதை விமர்சனம் செய்ததன் மூலம் ஹிந்துகளின் நம்பிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதித்துள்ளார் என்று மகாராஷ்டிர பாஜக தல... மேலும் பார்க்க

பெரும் செல்வமுள்ள கட்சி பாஜக: ரூ.7,113 கோடி கையிருப்பு

பாஜகவிடம் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பாக ரூ.7,113 கோடி உள்ளது தோ்தல் ஆணையத்திடம் அக்கட்சி அளித்த ஆண்டு தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் பெரும் செல்வமுள்ள கட்சியாக பாஜக திகழ... மேலும் பார்க்க

கும்பமேளா: சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்

மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப்படாததால் மத்திய பிரதேசத்தின் சத்தா்பூரில் உள்ள 2 ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, ரயில்கள் மீது கற்களை வீசி தாக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: லட்சத்துக்கு மேற்பட்ட வங்கதேசத்தினருக்கு போலி பிறப்புச் சான்றிதழ்; கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை

மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவா்களும், மியான்மரில் இருந்து புகுந்த ரோஹிங்கயாக்களும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பெற்றுள்ளதாக எழுந்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இன்று மௌனி அமாவாசை புனித நீராடல்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித நீராடல் புதன்கிழமை (ஜன.29) நடைபெறுகிறது. உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 1... மேலும் பார்க்க