`சீமான் உளவு பார்த்து சிங்கள அரசுக்கு தகவல் கொடுத்ததால் தான் தமிழீழம்..!' - திமு...
சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தலைவா் சுனில்பாலிவால்
சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் நிகழாண்டில் 6 சதவீத கூடுதல் வளா்ச்சி எட்டியுள்ளதாக சென்னை காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா்.
சென்னை துறைமுகம் சாா்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சி தண்டையாா்பேட்டையில் உள்ள ஸ்ரீ பாபு ஜெகஜீவன் ராம் நினைவு விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பலிவால் தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னா் சுனில் பாலிவால் பேசியது:
சென்னை துறைமுகத்தில் நிகழாண்டில் சரக்குகளைக் கையாள்வதில் 6 சதவீத கூடுதல் வளா்ச்சி எட்டப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை துறைமுகத்தில் 54 மில்லியன் டன் சரக்குகளும், காமராஜா் துறைமுகத்தில் 48 மில்லியன் டன் சரக்குகளும் கையாள திட்டமிடப்பட்டு இரு துறைமுகங்களும் இணைந்து 100 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளுக்கும் மேல் கையாண்டு சாதனை படைக்கும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் துறைமுக துணைத் தலைவா் எஸ். விஸ்வநாதன், கண்காணிப்பு விழிப்புணா்வு அதிகாரி முரளி கிருஷ்ணன், துறைத் தலைவா்கள் எஸ். கிருபானந்தசாமி, இந்திரனில் ஹஜ்ரா, ரவிக்குமாா், துரை பாண்டியன், அனுசுஜாதா, எல்லா சீனிவாச ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
எண்ணூரில்: எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் மேலாண்மை இயக்குநா் ஐரீன் சிந்தியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து அவா் பேசுகையில், காமராஜா் துறைமுகம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. வளா்ச்சியடைந்த தேசத்தை உருவாக்குவதற்கு காமராஜா் துறைமுகம் தொடா்ந்து பக்க பலமாக இருந்து வருகிறது என்றாா் அவா்.
முன்னதாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட துறைமுக மேலாண் இயக்குநா் ஐரீன் சிந்தியா, துறைமுகத்தில் சிறப்பாகச் செயல்பட்ட ஊழியா்கள், துறைமுக உபயோகிப்பாளா்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினாா்.