நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
நிர்மலா சீதாரமானுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிகூட தெரியாது! சுவாமி
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தில் ஏபிசிகூட தெரியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை (ஜன. 27) காலை தொடங்கியது.
இந்த நிகழ்வில் கொண்ட சுப்ரமணியன் சுவாமி, ”விஸ்வகுரு அல்லது விஸ்வபந்து: இந்தியாவுக்கான சரியான வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதையும் படிக்க : குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அரசியலமைப்பு! மணிப்பூர் எம்பி
அப்போது அவர் பேசியதாவது:
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தது.
பொருளாதாரத்தில் நாம் இன்னும் சமநிலையற்றவர்களாகவே இருக்கிறோம். பல துறைகளில் நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. பொருளாதாரம், ராணுவ பாதுகாப்பு போன்றவற்றுக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.
இந்தியா விஸ்வகுருவாக விரும்பினால், வருமான வரியை ஒழிப்பதில் இருந்து தொடங்க வேண்டும். வருமான வரிகளால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மொழி, சாதி எனப் பல்வேறு வகைகளில் நாம் பிளவுபட்டுள்ளோம். இதனைச் சரிசெய்தால் மட்டுமே விஸ்வகுரு ஆகமுடியும்.
நமது வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துள்ளது. வெளியுறவுக் கொள்கைக்காக மோடி தேர்வு செய்த நபர் அலுவலகத்தில் எழுத்தராக இருக்கக் கூட தகுதியற்றவர். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் மிகப்பெரிய கோமாளி. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரத்தின் ஏபிசிகூட தெரியாது.
மோடியை வீட்டுக்கு அனுப்புவதே அடுத்தக்கட்ட வேலை. மோடி பிரபலமானவர் என்று எந்த வகையில் கூறுகிறீர்கள். அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழை பெற காத்துக் கொண்டிருந்தார்கள்” என்றார்.