நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
Apollo: இந்தியாவில் முதன் முறையாக மார்பக நீக்க சிகிச்சை; அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் சாதனை!
சென்னை, 27 ஜனவரி 2025 – அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC), மார்பக புற்றுநோய் பாதித்த 46 வயதான நோயாளி மீது இந்தியாவில் முதன் முறையாக எண்டோஸ்கோபிக் வழிமுறையில் மறுசீரமைப்புடன் மாஸ்டெக்டோமி (மார்பக புற்றுக்கட்டியை அகற்றும்) அறுவைசிகிச்சையை செய்து ஒரு புதிய சாதனையை பதிவு செய்திருக்கிறது. மார்பக அழகை பாதிக்காமலும் மற்றும் விரைவாக குணமடைவதை உறுதி செய்யவும் ஒரு புதிய அறுவைசிகிச்சை புத்தாக்கத்தோடு புற்றுக்கட்டியை திறம்பட அகற்றியிருப்பதன் மூலம் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஒரு புதுயுகம் பிறந்திருப்தை இந்த புரட்சிகர செயல்முறை குறிக்கிறது.
46 வயது பெண்மணியான திருமதி. ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நோயாளிக்கு ஆரம்பநிலை மார்பக புற்றுக்கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டபோது அப்பெண்ணின் வாழ்க்கையில் அதிக சவாலான தருணத்தை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. அச்சம், நிச்சயமற்ற தன்மை மற்றும் அவரது எதிர்காலம் குறித்த பெரும் கவலை ஆகியவற்றோடு அவரது உடலிலும், அடையாளத்திலும் இது ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் என பலவித உணர்வுகளை இது அவரிடம் உருவாக்கியது. அவரது சூழ்நிலையில் இருக்கக்கூடிய பல பெண்களைப் போலவே பெண்மை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கக்கூடிய தனது மார்பகத்தை இழக்க நேரிடுமோ என்ற சிந்தனைகள் அவருக்கு கவலையையும், துயரத்தையும் ஏற்படுத்தின.
மார்பகத்தை அகற்றாமல் தக்க வைக்கும் அறுவைசிகிச்சைக்கு உரிய தகுதிநிலை அவருக்கு இல்லாததன் காரணமாக மார்பகத்தை அகற்றும் சிகிச்சையை மேற்கொள்ளுமாறு தொடக்கத்தில் இப்பெண்ணிற்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும் மார்பகத்தை தக்க வைத்துக் கொண்டு முழுமையான பெண்ணாக மீண்டும் உணர்வதற்கு உதவக்கூடிய வாய்ப்புகளை ஆராய்வதில் திருமதி. ரம்யா மிக உறுதியோடு இருந்தார். முழு மார்பக மறுகட்டமைப்பு சிகிச்சை மீது முனைப்புடன் இருந்த அவருக்கு இதற்கான சாத்தியங்களை புரிந்து கொள்ள வழிகாட்டல் தேவைப்பட்டது. டாக்டர்.
மஞ்சுளா ராவ் இதுகுறித்து கலந்தாலோசிக்கும்போது அனுபவமிக்க அந்த மருத்துவ நிபுணரோடு கலந்தாலோசித்தபோது நிபுணத்துவ ஆலோசனையோடு சிறந்த புரிந்துணர்வும் மற்றும் நம்பிக்கையும் அவருக்கு கிடைத்தது. எண்டோஸ்கோபிக் முறையில் மார்பகத்தின் மறுசீரமைப்புடன் மார்பக புற்றுக்கட்டியை மட்டும் அகற்றும் ஒரு புதுமையான சிகிச்சை செயல்முறை குறித்து டாக்டர் மஞ்சுளா அவருக்கு கவனமாக விளக்கிக் கூறினார். புற்றுநோய்க்கு திறன்மிக்க சிகிச்சையோடு அவரது மார்பகத்தின் இயற்கையான தோற்றத்தை தக்க வைக்கும் இரட்டை ஆதாய வாய்ப்பை, குறைவான ஊடுருவல் கொண்ட இந்த சிகிச்சை செயல்முறை திருமதி. ரம்யாவிற்கு வழங்கியது. இதை நன்கு புரிந்து கொண்ட திருமதி. ரம்யா இச்செயல்முறையை மேற்கொள்வது என்ற தைரியமான முடிவை எடுத்தார்.
அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்த இந்த முடிவு அச்சத்திற்கு பதிலாக தைரியத்தையும், நம்பிக்கையையும் அவரது மனதில் நிரப்பியது.
புற்றுச் செல்கள் பாதித்துள்ள திசுவை அகற்றும் அதே வேளையில், முலைக்காம்பையும் மற்றும் அதைச் சுற்றியுள்ள முகட்டு வட்டத்தையும் அகற்றாமல் தக்க வைக்கும் வாய்ப்பிற்கு இந்த அணுகுமுறை உதவியது. இதன் மூலம் மிகவும் இயற்கையாக தோற்றமளிக்கிற மார்பக மறுகட்டமைப்பிற்கு வழிவகுத்த இச்செயல்முறை, மார்பக அழகை மேம்படுத்துவதாகவும் அமைந்தது.
குறைந்த ஊடுருவலுள்ள மார்பக அறுவைசிகிச்சையான இதில் புற்றுக்கட்டி பாதிப்புள்ள மார்பகப்பகுதி மட்டும் அகற்றப்படும்; இந்த அறுவைசிகிச்சையின்போது புற்றுச் செல்கள் இருக்கின்றனவா என்று அறுவைசிகிச்சை செய்யும் அதே நேரத்திலேயே முலைக்காம்பிற்கு பின்பகுதியிலுள்ள திசுக்கள் பரிசோதிக்கப்படும்; அவை இருப்பது கண்டறியப்படுமானால் முழுமையான சிகிச்சையை உறுதி செய்ய மார்பக முலைக்காம்பு அகற்றப்படும்.
மார்பக ஆன்கோபிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். மஞ்சுளா ராவ் இது தொடர்பாக கூறியதாவது: “எண்டோஸ்கோபிக் முறையில் புற்று பாதிப்புள்ள மார்பகத்தை அகற்றும் மற்றும் மறுசீரமைப்பு செய்யும் செயலாக்கம் அதிக திருப்தியளிப்பதாக இருந்தது. நோயாளி விரைவாக குணமடைந்து இயல்பு நிலைக்கு மீள்வதை காண்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. எமது நோயாளிகளின் உணர்வு ரீதியான மற்றும் அழகியல் சார்ந்த கவலைகளுக்கு தீர்வுகாணும் அதே வேளையில் திறம்பட புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது மீது இதில் கூர்நோக்கம் செலுத்தப்படுகிறது.”
இந்த சிகிச்சை நேர்வில் புதுமை என்னவென்றால், எண்டோஸ்கோபிக் வழிமுறை மூலம் மார்பக நீக்க சிகிச்சை செய்யப்பட்டது. மிக குறைந்த ஊடுருவலுள்ள இந்த உத்தியில் மார்பக மடிப்புகளுக்குள் மறைக்கப்படுகிற ஒரு சிறிய கீறல் வழியாக புற்றுத்திசு அகற்றப்படுகிறது. மிக குறைவான வலியுடன் விரைவாக குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் சௌகரியத்தை இந்த உத்தி வழங்குகிறது. புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் அதே நேரத்தில் மேம்பட்ட அழகியல் பாதுகாப்பையும் இது உறுதி செய்கிறது. குறைவான ஊடுருவலுள்ள மார்பக அறுவைசிகிச்சை (MIBS) பிரிவில் இது மற்றுமொரு முன்னேற்றமாகவும், நோயாளிகளுக்கான விருப்பத்தேர்வாகவும் இருக்கிறது. மார்பக புற்றுநோயால் அவதியுறும் பெண்கள், அறுவைசிகிச்சை முறைகளில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றங்களினால் ஆதாயமடைவதற்கு இது வழிவகுக்கிறது.
புற்றுநோய் பாதிப்பை வென்றிருக்கிற திருமதி. ரம்யா இது குறித்து கூறியதாவது: “புற்றுநோயின் காரணமாக எனது உடலின் ஒரு முக்கிய பகுதியை இழப்பது பற்றி நான் கவலைப்பட்டேன்; ஆனால் இந்த மருத்துவச் செயல்முறை எனக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் தந்தது. இச்சிசிச்சையை மேற்கொண்ட மருத்துவருக்கும் மற்றும் அப்போலோவின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அவர்களது கனிவான பராமரிப்பு மற்றும் நிபுணத்துவ சிகிச்சை செயல்முறைக்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்-ன் குழும புற்றுநோயியல் மற்றும் இண்டர்நேஷனல் பிரிவின் தலைவர் திரு. தினேஷ் மாதவன் இது தொடர்பாக பேசுகையில், “இந்தியாவில் முதன் முறையாக எண்டோஸ்கோபிக் வழிமுறையில் மார்பக புற்றுநோய் பாதித்த மார்பகப் பகுதியை மட்டும் அகற்றுவது மற்றும் மார்பகத்தின் மறுசீரமைப்பு செயல்முறையின் அறிமுகம், புற்றுநோய் சிகிச்சையில் புத்தாக்கம் மற்றும் நேர்த்தி மீது நாங்கள் கொண்டிருக்கும் தளராத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
முன்னோடித்துவமான இந்த உத்தியானது பயனளிக்கும் திறன்மிக்க புற்றுநோய் சிகிச்சையை உறுதி செய்கிறது; அத்துடன் நோயாளிகளின் உணர்வு ரீதியான, அழகியல் சார்ந்த தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்குகிறது. அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில், மருத்துவச் சிகிச்சை விளைவுகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய இரண்டுக்கும் முன்னுரிமையளிக்கிற உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதே எமது தினசரி செயல்பாடாக இருக்கிறது. நோய் பாதிப்பிலிருந்து மீண்டு நலமுடன் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சையை ஒவ்வொரு நோயாளியும் பெறுமாறு செய்வதே எமது செயல்திட்டமாகும்” என்று கூறினார்.