செய்திகள் :

டொனால்ட் டிரம்ப் வெளியிடும் அறிவிப்புகள் அனைத்தும் அமலாகுமா? -உலக வங்கியின் தலைவர்

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகளுக்கு, அவசரகதியில் உடனடியாக பதிலளிக்காமல் பொறுமையாக ஆலோசனை மேற்கொண்டு அதன்பின் செயல்பட அறிவுறுத்தியுள்ளார் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா.

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகக் கடந்த 20-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப், அதன்பின் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகள் பல உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்த தவறவில்லை.

இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, “உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான்.. எந்தவொரு முடிவுக்கும் வரவோ அல்லது பதிலளிக்கவோ அவசரம் காட்டாதீர்..” என்றார்.

டான்ஸானியா நாட்டில் நடைபெற்ற ’மிஷன் 300 ஆப்பிரிக்க எரிசக்தி மாநாட்டில்’ பங்கேற்ற அஜய் பங்கா மேலும் பேசுகையில், “எந்தெந்த கொள்கைகளெல்லாம் செயல்படுத்தப்படுகின்றன என்பதை கொள்கை வகுப்பாளர்கள் பொறுத்திருந்து பார்த்து அதன்பின் செயல்பட” அறிவுறுத்தியுள்ளார்.

“டொனால்ட் டிரம்ப்புடன் சேர்ந்து நான் கடந்த காலங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் நடைமுறை சாத்தியக்கூறுகளுகளை அறிந்து செயல்படும் ஒரு மனிதர்” என்றும் குறிப்பிட்டுள்ளார் அஜய் பங்கா.

அமெரிக்க அரசுப் பணியாளர்கள் வாரத்தில் 5 நாள்கள் அலுவலகங்களுக்கு வருகை தர டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், உலக வங்கியில் பணியாற்றும் பணியாளர்கள் வாரத்தில் 4 நாள்கள் அலுவலகங்களுக்குச் சென்று பணியாற்றும் நடைமுறையில் எவ்வித மாற்றமுமில்லை எனவும் தெரிவித்துள்ளார் அஜய் பங்கா.

இந்தியா-அமெரிக்கா பிணைப்பே என்னை உருவாக்கியது-மைக்ரோசாஃப்ட் தலைவா் சத்யா நாதெள்ளா

இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லவொரு பிணைப்பே என்னை உருவாக்கியது என்று மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா தெரிவித்தாா். சியாட்டில் நகரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய குடியரசு தினம் கொ... மேலும் பார்க்க

சொ்பியா போராட்டம்: பிரதமா் ராஜிநாமா

சொ்பியாவில் பல வாரங்களாக நடைபெற்றுவந்த ஊழல் எதிா்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அந்த நாட்டு பிரதமா் மிலோஸ் வுசெவிக் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். கடந்த நவம்பர... மேலும் பார்க்க

அமெரிக்கா மின்கசிவால் ஏற்பட்ட காட்டூத் தீ?

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மின்கசிவு காரணமாக உருவாகியிருக்கலாம் என்று இது தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள... மேலும் பார்க்க

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம்: டிரம்ப் கருத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு உலகம் முழுவதும... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சா்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்

பாகிஸ்தான் எதிா்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் கடும் எதிா்ப்புக்கிடையே, சா்ச்சைக்குரிய இணையதள கட்டுப்பாட்டு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. சமூகப் பதற்றத்தை ஏற்படு... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: சரியான முடிவை பிரதமா் மோடி எடுப்பாா்- அமெரிக்க அதிபா் டிரம்ப்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியா்கள் குடியேறிய விவகாரத்தில் சரியான முடிவை பிரதமா் மோடி எடுப்பாா் என அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அதிபராக பதவியேற்றபின் முதல்முறையாக டொனால்ட் டிரம்ப... மேலும் பார்க்க