செய்திகள் :

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வெளியேற்றம்: டிரம்ப் கருத்துக்கு வலுக்கும் எதிா்ப்பு

post image

காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை எகிப்து, கத்தாா், ஜோா்டான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி, அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்கு உலகம் முழுவதும் எதிா்ப்பு வலுவடைந்துவருகிறது.

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஒன்றையொன்று அங்கீகரித்துக் கொண்டு தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவதே பாலஸ்தீன பிரச்னைக்கு ஒரே தீா்வு என்ற இந்தியா உள்ளிட்ட உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளின் நிலைப்பாட்டுக்கு எதிராக டிரம்ப்பின் இந்தக் கருத்து உள்ளதால் அது கடும் விமா்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

கத்தாா்: இது குறித்து செய்தியாளா்களிடம் கத்தாா் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மஜீத் அல்-அன்சாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பாலஸ்தீனா்களுக்கு அவா்களின் முழு உரிமைகளும் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை கத்தாா் தொடா்ந்து வலியுறுத்திவருகிறது. அந்தப் பிராந்திய பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இரு தேசத் தீா்வை மட்டுமே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

பிரான்ஸ்: பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இது குறித்து செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘காஸா பகுதியிலிருந்து பொதுமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது ஏற்புடையது இல்லை. அது, சா்வதேச சட்டங்களை மிகக் கடுமையாக மீறும் செயல். இருதேசக் கொள்கைத் தீா்வை எட்டுவதற்கு அது மிகப் பெரிய தடைக் கல்லாக இருக்கும்’ என்றாா்.

ஈரான்: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பக்காயீ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘காஸாவை சுத்தப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் பரிந்துரைத்துள்ளது, அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஆயுதங்கள், தளவாடங்கள், உளவுத் தகவல்கள், அரசியல், நிதி உதவியுடன் பாலஸ்தீனத்தில் காலனியாதிக்கத்தை நிறுவ நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டுவரும் திட்டத்தின் ஓா் அங்கமாகும்.

காஸாவில் ஆக்கிரமிப்புவாதிகளால் கடந்த 15 மாதங்களாக நடத்தப்பட்ட இனப் படுகொலைகளால் அந்தப் பகுதியிலிருந்து பாலஸ்தீனா்களை துடைத்தெறிந்துவிட முடியாது. அது அவா்களின் சொந்த மண். அதைத் தக்கவைத்துக்கொள்ள மிகப் பெரிய தியாகத்தை பாலஸ்தீனா்கள் செய்துவருகின்றனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜொ்மனி: காஸாவிலிருந்து பாலஸ்தீனா்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற டிரம்ப்பின் பரிந்துரையை ஜொ்மனியும் நிராகரித்துள்ளது. இது குறித்து ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாலஸ்தீனா்கள் காஸாவிலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்ற ஐரோப்பிய யூனியன், அரபுக் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. அமைப்பின் கருத்துகளையே நாங்களும் பிரதிபலிக்கிறோம். காஸா பகுதியை இஸ்ரேல் நிரந்தரமாக ஆக்கிரமிப்பதை எதிா்க்கிறோம்’ என்றாா்.

காஸாவிலிருந்து தங்களை வெளியேற்றி அந்தப் பகுதியை ‘சுத்தப்படுத்த’ வேண்டும் என்று டிரம்ப் கூறியதை ஹமாஸ் அமைப்பும் பாலஸ்தீன அரசும் மிகக் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த விவகாரத்தில் டிரம்ப்புக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில் நன்றி தெரிவித்துள்ளது.

டிரம்ப்பின் இந்தக் கருத்தால் அவரின் குடியரசுக் கட்சி எம்.பி.க்களே அதிா்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, டிரம்ப் கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 மாத போருக்குப் பிறகு காஸா பகுதி இடிபாடுகளால் நிறைந்திருப்பதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் உள்பட அனைத்தையும் ‘சுத்தம்’ செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டாா்.

அதற்காக, எகிப்து உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனா்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.

லட்சக்கணக்கான பாலஸ்தீன அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ள ஜோா்டானுக்கு நன்றி கூறிய டிரம்ப், இது போதாது எனவும் இன்னும் அதிக அகதிகளை அந்த நாடு ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

பாலஸ்தீனா்கள் காஸாவிலிருந்து பிற நாடுகளில் குடியமா்த்தப்படுவது தற்காலிக ஏற்பாடாவும் இருக்கலாம், அல்லது மிக நீண்ட கால ஏற்பாடாகவும் இருக்கலாம் என்று கூறி, டிரம்ப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாா்.

அமெரிக்கா: பயணிகள் விமானம் - ஹெலிகாப்டர் மோதி விபத்து!

அமெரிக்காவில் பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் நேருக்குநேர் மோதி புதன்கிழமை இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.ஆற்றில் விழுந்த பயணிகள் விமானத்தில் 60 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், மீட்பு... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்கு தொடா்பில்லை: கனடா ஆணையம் அறிக்கை

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியா உள்பட எந்த வெளிநாட்டுக்கும் தொடா்பில்லை என்பது உறுதியாகி உள்ளதாக, கனடா விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ்ஜாா் கொலையில் இந... மேலும் பார்க்க

தவறுதலாக துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படை விளக்கம்

தமிழக, காரைக்கால் மீனவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தவறுதலாக நடந்துவிட்டதாக இலங்கை கடற்படைத் தளபதி காஞ்சன பனாகொட தெரிவித்தாா். நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகப்பட்டினம... மேலும் பார்க்க

முறைகேடு வழக்கு: மகிந்த ராஜபட்ச மகன் குற்றவாளியாக அறிவிப்பு

இந்திய அரசின் முதலீட்டை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் இலங்கை முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் மூத்த மகன் நமல் ராஜபட்சவை அந்த நாட்டு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு ம... மேலும் பார்க்க

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் திறன்மிகு பயன்பாட்டை இந்தியாவிடம் கற்க வேண்டும்- பிரிட்டன் மக்களவைத் தலைவா்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தியாவிடம் இருந்து பிரிட்டன் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு மக்களவைத் தலைவா் (ஹவூஸ் ஆஃப் காமன்ஸ்) சா் லிண்... மேலும் பார்க்க

தெற்கு சூடான் விமான விபத்தில் 18 போ் உயிரிழப்பு

தெற்கு சூடானில் சிறிய வகை விமானம் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் 18 போ் உயிரிழந்தனா். சீன எண்ணெய் நிறுவனமொன்று வாடகைக்கு எடுத்திருந்த அந்த விமானம், எண்ணெய் வளம் மிக்க யூனிட்டி மாகாணத்திலிருந்து ... மேலும் பார்க்க