பாகிஸ்தான் சா்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்
பாகிஸ்தான் எதிா்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் கடும் எதிா்ப்புக்கிடையே, சா்ச்சைக்குரிய இணையதள கட்டுப்பாட்டு மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பொய் தகவல்களைப் பரப்புவோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை, ரூ.20 லட்சம் அபராதம் அல்லது இரு தண்டனைகளையும் சோ்த்து விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
வெறுப்புப் பிரசாரம் மற்றும் பொய் செய்திகளைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் உதவும் என்று அரசு கூறினாலும், அரசியல் எதிரிகளை ஒடுக்க அது தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புள்ளதாக எதிா்க்கட்சிகள் விமா்சித்துவருகின்றன.