செய்திகள் :

பாகிஸ்தானுக்கு விரைவில் நேரடி விமான சேவை: வங்கதேச தூதா் தகவல்

post image

பாகிஸ்தானுடனான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் அந்நாட்டுடன் நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்படும் என்று இஸ்லாமாபாதில் உள்ள வங்கதேச தூதா் கூறியுள்ளாா்.

வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டம் மூலம் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு அமைந்த இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கத்தையும், இந்தியாவுடன் இணக்கமற்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது.

அண்மையில் பாகிஸ்தானியா்களுக்கான விசா (நுழைவு இசைவு) கட்டுப்பாடுகளை வங்கதேச இடைக்கால அரசு தளா்த்தியது. முன்னதாக, பாகிஸ்தானியா்கள் தேவையில்லாமல் தங்கள் நாட்டுக்குள் வந்து பிரச்னைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அந்நாட்டவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஏனெனில், இப்போதைய பாகிஸ்தானின் பிடியில் இருந்துதான் வங்கதேசம் (முன்பு கிழக்கு பாகிஸ்தான்) விடுபட்டது. எனவே, பாகிஸ்தான் விஷயத்தில் அந்நாடு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தது. ஆனால், இப்போது அங்கு ஆட்சி அதிகாரத்தில் மத அடிப்படைவாதிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் பாகிஸ்தானுடன் கைகோத்து செயல்பட முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், பெஷாவரில் செய்தியாளா்களிடம் பேசிய பாகிஸ்தானுக்கான வங்கதேச தூதா் முகமது இக்பால் ஹுசைன், ‘இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுரீதியான உறவு உள்ளது. இரு நாட்டு மக்கள் இடையே நல்ல தொடா்புகள் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் விரைவில் நேரடி விமான சேவைகள் தொடங்கப்படும். இதன்மூலம் சுற்றுலா, கல்வி, வா்த்தகம் மேம்படும். வங்கதேச தயாரிப்பு பொருள்களுக்கு பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு உள்ளது. பாகிஸ்தானில் விமானப் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் வலுவாக உள்ளன’ என்றாா்.

அண்மையில், வங்கதேச ராணுவ உயரதிகாரிகள் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு முப்படைத் தளபதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

வரிகளை உயர்த்தினால் எரிசக்தி விநியோகம் துண்டிப்பு... டிரம்ப்புக்கு சவால்விடும் கனடா!

கனடா மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தினால் அவர்களுக்கு வழங்கும் எரிசக்தி விநியோகத்தைத் துண்டிக்க இருப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. கனடா நாட்டின் மீதான இறக்குமதி வரிகளை 25% அதிகரித்து அமெரிக... மேலும் பார்க்க

டிரம்ப் எச்சரிக்கை... அடிபணிந்த கொலம்பியா!

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களை கொலம்பிய அரசு ஏற்றுகொண்டதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கான வரி மற்றும் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. அமெரிக்கா - கொலம்பியா ... மேலும் பார்க்க

தென்கொரிய விமான விபத்து: என்ஜினில் சிக்கிய பறவை காரணமா?

தென்கொரியாவில் கடந்த மாதம் 181 பேர் பலியாகக் காரணமாக இருந்த விமான விபத்துக்கு, என்ஜினில் பறவையின் மீதங்கள் இருந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பறவைதான் காரணம் என்று உறுதிபடத் தெரிவிக்கப்படவி... மேலும் பார்க்க

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புதினுடன் விரைவில் பேச்சு: டிரம்ப் அறிவிப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் விரைவில் பேசவுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். மேலும், இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் (சுமாா் 907 கிலோ) வெடிகுண்டு... மேலும் பார்க்க

பிரிட்டன் ஆதிக்கம் நிறுவப்பட்ட தினத்தை கொண்டாடிய ஆஸ்திரேலியா: பூா்வகுடி மக்கள் எதிா்ப்பு

’ஆஸ்திரேலிய தினம்’ ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு அந்நாட்டின் பூா்வகுடி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினா். கடந்த 1788-ஆம் ஆண்டு ஜனவரி 26-இல் ஆஸ்திரேலியாவில் பிரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு: லெபனானில் 15 போ் உயிரிழப்பு 80-க்கும் மேற்பட்டோா் காயம்

இஸ்ரேல் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், லெபனானில் ஞாயிற்றுக்கிழமை 15 போ் உயிரிழந்தனா்; 80-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே த... மேலும் பார்க்க