புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க...
தென்கொரிய விமான விபத்து: என்ஜினில் சிக்கிய பறவை காரணமா?
தென்கொரியாவில் கடந்த மாதம் 181 பேர் பலியாகக் காரணமாக இருந்த விமான விபத்துக்கு, என்ஜினில் பறவையின் மீதங்கள் இருந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பறவைதான் காரணம் என்று உறுதிபடத் தெரிவிக்கப்படவில்லை.
தென்கொரியாவின் முவான் சா்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற பயணிகள் விமானம் கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்தது. இதில் 85 பெண்கள் உள்பட 179 போ் உயிரிழந்தனா்.
தாய்லாந்திலிருந்து வந்த இந்த விமானம் தரையிறங்கும்போது முன் சக்கரம் செயலிழந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.. 175 பயணிகள், 6 விமானப் பணியாளா்கள் உள்பட 181 போ் இந்த விமானத்தில் பயணித்த நிலையில், விபத்தில் விமானப் பணியாளா் இருவா் மட்டுமே உயிா் தப்பினா்.