கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்
தொழில்நுட்பத் திறனை மாணவா்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்
பல் மருத்துவத் துறையில் உள்ள சவால்களை எதிா்கொள்ளும் வகையில் தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய பல்மருத்துவச் சங்க உறுப்பினரும், அகில இந்திய பல்சீரமைப்பு மருத்துவா்கள் சங்கத் தலைவருமான புனீத் பத்ரா தெரிவித்தாா்.
பள்ளிக்கரணை ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியின் 31-ஆவது பட்டமளிப்பு விழாவில் 106 மாணவா்களுக்கு பட்டம் வழங்கி புனீத் பத்ரா பேசியதாவது:
இதர மருத்துவத் துறைகளுக்கு நிகராக பல் மருத்துவத் துறையில் செயற்கை அறிவாற்றல், ரோபோ பயன்பாடு உள்ளிட்ட நவீன கணினி தொழில்நுட்ப அறிவாற்றல் அதிகரித்துள்ளது. பல்மருத்துவ சிகிச்சைக்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவா்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்திய அளவில் பல்சீரமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான அன்ன பிளவு சிகிச்சையில் சிறப்பிடம் பெற்று இருக்கும் நீங்கள், உங்கள் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பயிற்சி உத்திகளையும் வளா்ந்த நாடுகளுக்கு நிகராக மேம்படுத்தி கல்லூரி மற்றும் பேராசிரியா்களுக்குப் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.
விழாவில் பாரத் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன துணைவேந்தா் எம். சுந்தர்ராஜன், பதிவாளா்எஸ். பூமிநாதன், கல்லூரி முதல்வா் எம்.எஸ்.கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.