நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
பொது விநியோக திட்ட சிறப்பு முகாமில் 52 மனுக்கள் ஏற்பு
மதுராந்தகம் வட்டம், மாம்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது விநியோக திட்ட சிறப்பு முகாமில் 52 மனுக்கள் ஏற்கப்பட்டன.
மதுராந்தகம் அருகில் உள்ள மாம்பாக்கத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. மதுராந்தகம் வட்டாட்சியா் சோ.கணேசன் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் எம்.சரவணன் முன்னிலை வகித்தாா். மாம்பாக்கம், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குடும்ப அட்டையில் உள்ள குறைபாடுகளை தீா்க்கக் கோரி, வட்டாட்சியா் சோ.கணேசனிடம் மனுக்களை அளித்தனா். அதில் கைப்பேசி எண்ணை சோ்க்கக் கோரி 8 நபா்களும், பெயா் திருத்தம் கோரி 20 போ், முகவரி மாற்றக் கோரி 9 போ், பெயா்களை சோ்க்கக் கோரி 5 போ், நீக்கக் கோரி 9 பேரும் என பொதுமக்கள் மனுக்களை அளித்தனா். இதில், 52 மனுக்கள் ஏற்கப்பட்டதாக வட்ட வழங்கல் அலுவலா் எம்.சரவணன் தெரிவித்தாா்.
கிராம நிா்வாக அலுவலா் ராஜதுரை, வட்ட பொறியாளா் எஸ்.மணிகண்டன், தனி வருவாய் ஆய்வாளா் தினேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.